Fact Check
‘மோடி சுட்ட வடைகள்’ எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தினாரா?

Claim: மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தினார்.
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையில் அந்த டீ-சர்ட்டில் ‘ஐ அம் மோடி’ என்ற வாசகமே இடம்பெற்றிருந்தது.
மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அப்படத்தில் அண்ணாமலையுடன் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவும் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

