ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkவிவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் பழைய படம்!

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் பழைய படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் படம்!

Fact: இப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முந்திய, 2021 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை இன்று நடத்தி வரும் நிலையில், டெல்லி நோக்கி வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் புகைப்படம்

X Link | Archived Link

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் புகைப்படம்

Archived Link

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் புகைப்படம்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் கனடா வீடியோ!

Fact Check/Verification

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் ”Farmers at Ghazipur protest move tents to make way for ambulances amid barricading” என்று தலைப்பிட்டு பிப்ரவரி 04, 2021 அன்று இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிய தருணத்தில் அப்படம் எடுக்கப்பட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் புகைப்படம்

தொடர்ந்து தேடியதில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளும், இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதோரா இதே படத்தை பிப்ரவரி 06, 2021 அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படம் பழைய படம் என்பதும், தற்போது நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் அப்படத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகின்றது.

 Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடம் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from India Today, Dated February 04, 2021
Tweet from Priyanka Gandhi Vadra, General Secretary, Indian National Congress, Dated February 06, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular