ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkசிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: பாஜக ஊழலை வெளிப்படுத்துவேன்.ஜெயில் கைதி கெஜ்ரிவால் அடேய் என்னடா இந்த அடி அடிக்கிறீங்க

Fact: வைரல் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“பாஜக ஊழலை வெளிப்படுத்துவேன்.ஜெயில் கைதி கெஜ்ரிவால் அடேய் என்னடா இந்த அடி அடிக்கிறீங்க” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @Agmarksanghi

X Link

Screenshot from X @Shibin_twitz

X Link

Screenshot from X @ithanagaraj

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?

Fact Check/Verification

சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

“Arvind Kejriwal slapped by man during roadshow, cops say attacker an AAP supporter” என்று இதுகுறித்த செய்தி கடந்த மே 05, 2019 அன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லி ரோடு ஷோவில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்ட இந்த வீடியோ, தற்போதைய ஒன்று என்று பரவி வருகிறது.

 Also Read: மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?

Conclusion

சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report By Times Of India, Dated May 05, 2019
YouTube Video From, NDTV

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular