புதன்கிழமை, மே 29, 2024
புதன்கிழமை, மே 29, 2024

HomeFact Checkமோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?

மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கர்நாடகாவில் மோடியின் உருவ பொம்மையை எரித்த 5 காங்கிரஸ்காரர்களின் லுங்கியில் தீப்பிடித்தது.

Fact: வைரலாகும் வீடியோ நிகழ்வு கடந்த 2012ஆம் ஆண்டு கேரளப்பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்றதாகும்.

மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் என்று வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

”கர்நாடகாவில் மோடியின் உருவ பொம்மையை எரித்த 5 காங்கிரஸ்காரர்களின் லுங்கியில் தீப்பிடித்தது.
இது எப்படி இப்ப மோடிஜியின் உருவ பொம்மைகள் கூட இவனுங்களுக்கு பாடம் புகட்ட ஆரம்பித்துவிட்டது”
என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

மோடியின்
Screenshot from x @kasthuri_sree

X Link

Screenshot from X @DrRathigamano

X Link

Screenshot from x @ArUgurunathan

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: போதை மனிதனின் அடிப்படை உரிமை என்று பேசினாரா இயக்குநர் வெற்றிமாறன்?

Fact Check/Verification

மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ காட்சி, கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று யூடியூப் பக்கம் ஒன்றில், “பத்தனம்திட்டாவில் தீப்பிடித்த காட்சி” என்று இடம்பெற்றிருந்தது.

தொடந்து தேடியதில், கடந்த ஜூலை 05, 2012 அன்று ஏஷியா நெட் இதுகுறித்த செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, எம்ஜி பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தரை எதிர்த்து போராட்டம் நடைபெற்றபோது கேரள மாணவர் சங்கத்தினர் அவரது உருவபொம்மையை தீவைத்து எரிக்க முயன்றுள்ளனர். ஆனால், அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களுடைய வேஷ்டியில் தீப்பற்றிக்கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த வீடியோவையே காங்கிரஸ் கட்சியினர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது தீப்பற்றியதாக பரவி வருகிறது.

Also Read: மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளாரா செங்கோட்டையன்?

Conclusion

மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது   நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube video from, AsiaNet News, Dated July 05, 2012


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular