வியாழக்கிழமை, மே 2, 2024
வியாழக்கிழமை, மே 2, 2024

HomeFact Checkஊடகங்களில் மட்டுமே அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

ஊடகங்களில் மட்டுமே அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஊடகங்களில் மட்டுமே அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் – எடப்பாடி பழனிச்சாமி

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் தவறான புரிதலில் பரவுகிறது.

ஊடகங்களில் மட்டுமே அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @nakkheeranweb

Twitter Link

Screenshot from Facebook/ShanmugaBoobalan

Facebook Link

Twitter Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை ‘முஸ்லீம் எக்ஸ்பிரஸாக’ மாற்றினரா இஸ்லாமியர்கள்?

Fact Check/Verification

ஊடகங்களில் மட்டுமே பாமக அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 12 அன்று சேலத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சரியாக 11.20 நிமிடங்களில் செய்தியாளர் ஒருவர் அவரிடம், ”பாமகவின் ஆதரவு இன்றி வடமாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற முடியாது என்கிறாரே டிடிவி தினகரன்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, “அவர் என்னவேண்டுமானாலும் பேசுவார். அவரை கட்சிக்காரர் என்று நாங்கள் நினைப்பதில்லை. இவ்வாறு பேசி பேசி அவர் ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் மட்டுமே கட்சி நடத்துகிறார்” என்று பதிலளித்தார்.

இதனையே, எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ் பற்றி பேசியதாக தவறாக செய்தியாக பதிவிட்டு வருகின்றனர் என்பது உறுதியாகிறது.

Also Read: ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Conclusion

ஊடகங்களில் மட்டுமே பாமக அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video From, Thanthi Tv, Dated August 12, 2023

YouTube Video From, Polimer News, Dated August 12, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular