Fact Check
தவெகவில் IRS அதிகாரி அருண் ராஜூவிற்கு இடமில்லை என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Claim
தவெகவில் IRS அதிகாரி அருண் ராஜூவிற்கு இடமில்லை
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று தந்தி டிவி விளக்கமளித்துள்ளது.
தவெகவில் IRS அதிகாரி அருண் ராஜூவிற்கு இடமில்லை என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”IRS அதிகாரி அருண்ராஜுவிற்கு தவெகவில் இடமில்லை
ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்து ரகசிய ஃபைல் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் அருண்ராஜுக்கு பதவி வழங்குவது குறித்து மிக காட்டமாக விஜயிடம் பேசியிருப்பதாக தகவல்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கீழ்சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதியினரால் தாக்கப்பட்டாரா?
Fact Check/Verification
தவெகவில் IRS அதிகாரி அருண் ராஜூவிற்கு இடமில்லை என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.
அப்போது, கடந்த மே 26, 2025 அன்று, “இப்படி எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. பகிரவும் இல்லை. இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்!” என்று அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கமளித்திருந்தனர்.
மேலும், இதுதொடர்பாக தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது போலியான செய்தி” என்று விளக்கமளித்தார். தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளரான ராஜ் மோகனும் இந்த செய்தி போலியானது என்று உறுதிப்படுத்தினார்.
கடந்த மே 27ஆம் தேதியன்று IRS பதவியில் இருந்து தனது விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்றுள்ளார் அருண் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாரா விஜய்?
Conclusion
தவெகவில் IRS அதிகாரி அருண் ராஜூவிற்கு இடமில்லை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post from, Thanthi TV, Dated May 26, 2025
Phone Conversation with, CTR.Nirmal Kumar, TVK, Dated June 04, 2025
Phone Conversation with, Raj Mohan, TVK, Dated June 04, 2025