தமிழ்நாடு பாஜக குறித்தும், தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகிக்கின்ற அண்ணாமலை குறித்தும் ஒரே நாளில் தொடர்ச்சியாக போலி நியூஸ் கார்டுகள் வைரலாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் ஒளிப்பரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்றுள்ள குழந்தைகளுக்கான காமெடி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற இரண்டு குழந்தைகள் ஒரு சிறு நாடகத்தை அந்நிகழ்ச்சியின் பாகமாக நடத்தியிருந்தன.
சில வருடங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு சார்பாக பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு திட்டத்தை சாடுவது போல குறிப்பிட்ட நிகழ்ச்சியின் அப்பகுதி அமைந்திருந்ததைத் தொடர்ந்து பாஜகவினர் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட நிகழ்ச்சி தொடர்பாக விமர்சித்திருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் அந்நிகழ்ச்சி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி குறித்து ஏழு நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் தொலைக்காட்ச்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே குறிப்பிட்ட நிகழ்வு குறித்து பாஜக மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதுசார்ந்த எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறு குழந்தைகள் மூலமாக தொடுக்கப்பட்ட விமர்சனைத்தைக் கூட பாஜகவினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்கிற கருத்தினைத் தொடர்ந்தே குறிப்பிட்ட ஃபேக் நியூஸ் கார்டுகள் வைரலாகி வருகின்றன.
Fact Check/Verification
வைரலாகும் போலி நியூஸ் கார்டுகளையும் அதற்கான பாஜக மற்றும் அண்ணாமலை தரப்பிலான எதிர்வினைகளையும் இங்கே இணைத்துள்ளோம். மற்ற இரண்டு நியூஸ் கார்டுகள் குறித்து தந்தி டிவி மற்றும் ஜூவி தரப்பில் அவை போலி என்பதை உறுதி செய்து கொண்டோம்.
கருத்தியல் ரீதியான ஆரோக்கியமான தர்க்கங்களைத் தாண்டி யாராக இருந்தாலும் பொய்ச்செய்திகளை பரப்புவது சமூகக்குற்றம் என்பதால் அவற்றை பரப்புவது தவறு என்று இதன்மூலம் எடுத்துரைக்க விரும்புகிறோம்.
Also Read: சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம் என்றாரா அமைச்சர் சக்கரபாணி?
Conclusion
தமிழ்நாடு பாஜக மற்றும் எதிர்க்கட்சியான அஇஅதிமுக குறித்து வைரலாகின்ற நியூஸ் கார்டுகள் எடிட் செய்யப்பட்டவை என்பதை இங்கே விளக்கிக் கூறியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)