சனிக்கிழமை, ஜூன் 15, 2024
சனிக்கிழமை, ஜூன் 15, 2024

HomeFact Checkகட்டுடன் பாஜகவினர்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கட்டுடன் பாஜகவினர்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாஜகவினர் திமுகவை எதிர்த்து கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கட்டுடன் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை கிண்டலடிக்கும் வகையில் நெட்டிசன்கள் பலர்  சமூக வலைத்தளங்களங்களில் பதிவுகள் இட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் பாஜகவை கிண்டலடிக்கும் பதிவு.
வைரலாகும் பதிவு.

Fact Check/Verification

கடந்த திங்கட்கிழமை(21/10/2020) அன்று சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக  பாஜக மற்றும் திமுகவினருடையே மிகப்பெரியத் தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறில் தொடங்கிய இப்பிரச்சனை கடைசியில் கைக்கலப்பில் போய் முடிந்தது.

இப்பிரச்சனைக் குறித்துப் புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

புதிய தலைமுறையில் வந்தச் செய்தி.

இப்பிரச்சனையின் தொடர்ச்சியாக பாஜகவினர் கை, மற்றும் தலையில் கட்டுப் போட்டப்படி  செப்டம்பர் 22 அன்று போராட்டங்களில் ஈடுபட்டனர். இவ்விஷயம்தான் தற்போது நெட்டிசன்கள் பலரால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

அடியே படாமல் பொய்க்கட்டுகளை அணிந்தபடி பாஜகவினர் நாடகமாடுவதாக கூறி நெட்டிசன்கள் பலர் பாஜகவினரை சமூக வலைத் தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கிண்டலடிக்கப்படும் இச்சம்பவத்தின் உண்மையானப் பின்னணி என்ன என்பதை அறிய இவ்விஷயத்தை நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மை என்ன?

கேலிக்குள்ளான இச்சம்பவத்தின் உண்மைத் தன்மைக் குறித்த அறிய, இச்சம்பவம் குறித்து கூகுளில் தேடினோம்.

நம் தேடலில் தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராக விளங்கும் சுமதி வெங்கடேஷ் அவர்கள் இச்சம்பவம் குறித்துத் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

அதில்,

நேற்று திமுக அராஜகத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது பாஜக நிர்வாகிகள் அனைவரும் திமுகவின் அராஜகத்தை மக்களிடம் எடுத்துக் காட்டும் விதமாக கை மற்றும் தலையில் கட்டு அணிவித்து போராட்டம் நடத்தினோம்.

இதை சில நபர்கள் தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற முயற்சிகளால் எந்தவிதப் பலனையும் அவர்கள் அடையப் போவதில்லை.

திமுகவின் அராஜகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எங்களது கடமை

என்று பதிவிட்டிருந்தார்.

சுமதி வெங்கடேஷ் அவர்களின் டிவிட்டர் பதிவு.

சுமதி அவர்களின் டிவிட்டர் பதிவின் மூலம், திமுகவினருடன் ஏற்பட்ட தகராறுக்கும் பாஜகவினர் அணிந்திருந்த கட்டுகளுக்கும் எவ்வித தொடர்பில்லை என்றும் திமுகவினருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே இவ்வாறு ஒரு நூதனப் போராட்டம் பாஜகவினரால் நடத்தப்பெற்றுள்ளது என்றும் நமக்குத் தெளிவாகிறது.

Conclusion

வரும் 2021 பொதுத் தேர்தலில் தங்களது இருப்பை நிலைநிறுத்த பாஜக தொடர்ந்து பல நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. அந்நடவடிக்கைகள் யாவும் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகுவதும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.  

இதேபோல்தான் பாஜகவின் இந்தப் போராட்டமும் கேலிக்குள்ளாகி உள்ளது என்று நம் விசாரணையின் மூலம் தெளிவாகியுள்ளது.

Result: Misleading


Our Sources

Twitter Profile: https://twitter.com/Samaniyantweet/status/1308655455669952512

Twitter Profile: https://twitter.com/sivanandam502/status/1308456469352738816

Sumathi Venkatesh’s Twitter Profile: https://twitter.com/SumathiVenkat18/status/1308743489954279425

Puthiya Thalaimurai YouTube Channel: https://www.youtube.com/watch?v=i_IINSRBXYI


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular