சனிக்கிழமை, ஜூன் 22, 2024
சனிக்கிழமை, ஜூன் 22, 2024

HomeFact Check‘ரத்தம் சொட்ட நிற்கிறார்கள்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘ரத்தம் சொட்ட நிற்கிறார்கள்’ என்று அண்ணாமலை கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாஜகவினர் திமுகவை எதிர்த்து கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை சமூக வலைத்தளங்களங்களில் இருப்போர் கிண்டலடித்தனர். இதனை விமர்சித்து தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்தி ஒன்று பரப்பப்படுகிறது.

Fact Check/Verification

கடந்த திங்கட்கிழமை(21/10/2020) அன்று சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக  பாஜக மற்றும் திமுகவினருடையே மிகப்பெரியத் தகராறு ஏற்பட்டது.

இதன்பின் பாஜகவினர் கை மற்றும் தலையில் கட்டுகளுடன் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் சமூக வலைத்தளங்களில் பலமாகக் கிண்டலடிக்கப்பட்டது. இதுக்குறித்து ஏற்கனவே நியூஸ்செக்கர் சார்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அக்கட்டுரையைப் படிக்க: https://tamil.newschecker.in/fact-checks/bjp-with-bandage-roasting-netizens/

தற்போது பாஜகவினரைக் கிண்டலடிப்பவர்களை விமர்சிக்கும் வகையில்  தமிழக பாஜகவின் துணைத் தலைவராக விளங்கும் அண்ணாமலை அவர்கள் பதிவு ஒன்றை இட்டதாக புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அப்புகைப்படத்தில்,

“ரத்தம் சொட்டச் சொட்ட நிற்கிறார்கள். வருத்தப்படத் தேவையில்லை. அவர்களுக்காக அழுகத் தேவையில்லை.

ஆனால் தற்போது தமிழ் சமூக வலைத்தளங்களின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

சக மனிதன் மீதான வன்முறையைக் கொண்டாடும் மனநிலையில் தான் நாம் உரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையிலும் வேதனை.”

என்று பதிவிடப்பட்டுள்ளது.

அண்ணாமலை அவர்கள் குறித்து வைரலாகும் பதிவு,
வைரலாகும் பதிவு,

ஆனால் இப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இது பொய்க்கட்டு என்று கூறியதால், அண்ணாமலை அவர்களை சமூக வலைத் தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

உண்மை என்ன?

அண்ணாமலை அவர்களை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கிய இந்தப் பதிவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் அதை ஆராய முடிவெடுத்தோம்.

முதலில் அண்ணாமலை அவர்கள் இதுப்போன்று பதிவிட்டாரா என்பதை அறிய அவரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை ஆராய்ந்தோம். ஆனால் இவ்வாறு ஒரு பதிவை அவரின் எந்த சமூக வலைத்தளங்களிலும் காண முடியவில்லை.

இதன்பின் வைரலான பதிவில் இருந்த வாசகங்களை வைத்து, அது எங்கு பதிவிடப்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக்கில் தேடினோம்.

இவ்வாறு தேடியபோது இதன் உண்மைப் பின்னணியை நம்மால் அறிய முடிந்தது. Annamalai IPS Fans எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு ஒரு பதிவு போடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

அண்ணாமலை அவர்களின் ரசிகர்கள் பக்கத்தில் வந்தப் பதிவு.
Annamalai IPS Fans பக்கத்தில் வந்தப் பதிவு

அண்ணாமலை அவர்களுக்கு ஃபேஸ்புக்கில் ஏராளமான ரசிகர் பக்கங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கும் ஒரு ரசிகர் பக்கத்தில் போடப்பட்ட பதிவே எடிட் செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது என்று உண்மையை மேற்கண்ட பதிவை கண்டதன் மூலம் நம்மால் உணர முடிந்தது.

வாசகர்களின் புரிதலுக்குக்காக உண்மையானப் படத்தையும், எடிட் செய்யப்பட்டப் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப் பின், சமூகவலைத் தளங்களில் பரப்பபடும் தகவலை அண்ணாமலை அவர்கள் பதிவிடவே இல்லை என்பதும், அவரது ரசிகர் பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவையே அண்ணாமலை அவர்கள் பதிவிட்டதுபோல் எடிட் செய்து விஷமிகள் பரப்புகிறார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.

Result: Misleading


Our Sources

Twitter Profile: https://twitter.com/jonymosesdmk/status/1308824052002205698

Twitter Profile: https://twitter.com/chenshank4u/status/1309034197827420163

Facebook Profile: https://www.facebook.com/ipsofficerannamalai/posts/150787366720420

Twitter Profile: https://twitter.com/Prabhasmekian/status/1308973111073738752


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular