வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkகபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot From Facebook/GobichettipalayamTown

”கபினி வனப்பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் முதலையிடம் தப்பித்த மான்” என்பதாக இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from Facebook/muruga.nandam.9022

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

Also Read: சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி!

Fact Check / Verification

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவில் “Latest Sightings” என்கிற லோகோ இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து கூகுளில் கீ-வேர்ட்கள் மூலமாகத் தேடினோம்.

அப்போது, குறிப்பிட்ட வீடியோவை Latest Sightings என்கிற பேஸ்புக் பக்கம் கடந்த ஜனவரி 31, 2023 அன்று பதிவிட்டிருந்தது என்பது நமக்குத் தெரிய வந்தது. அவர்களுடைய யூடியூப் பக்கத்திலும் அதே தேதியில் குறிப்பிட்ட வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அந்த வீடியோ போட்ஸ்வானாவில் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய இணையப்பக்கத்தில் ஆண்மானைத் துரத்தும் முதலை வீடியோவை எடுத்தவர் “Caitlyn Earwaker” என்கிற கால்நடை செவிலியர் மாணவர் மற்றும் புகைப்படக்கலைஞர் என்பதாக குறிப்பிட்டிருந்தது.

தொடர்ந்து, அதில் இணைக்கப்பட்டிருந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த இந்த வீடியோ, “Chobe ஆற்றில் குடும்பத்துடன் நாங்கள் படகில் சென்றபோது இந்த காட்சியைக் கண்டோம். ஆச்சரியகரமான காட்சி இது. அந்த மான் மிகவும் அதிர்ஷ்டசாலி. முதலையிடம் இருந்து தப்பிவிட்டது” என்பதாக தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

Instagram will load in the frontend.

எனவே, வைரல் வீடியோ போட்ஸ்வானா, Chobe ஆற்றில் எடுக்கப்பட்டது என்பது இதன் மூலமாக தெரிகிறது.

Also Read: நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று விசிக காலில் விழுந்து கேட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் வீடியோ உண்மையில் போட்ஸ்வானாவில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Latest Sightings
Facebook Post From, Latest Sightings, Dated January 31, 2023
YouTube Post From, Latest Sightings, Dated January 31, 2023
Instagram Post From, Caitlyn Earwaker


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular