ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkநாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று விசிக காலில் விழுந்து கேட்டதாகப் பரவும் போலி...

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று விசிக காலில் விழுந்து கேட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்பதாக ஈரோடு கிழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மக்களின் காலில் விழுந்து பரப்புரை செய்தனர் என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“திமுக தலித் அணி சார்பில் விசிக கட்சியினர் பரப்புரை. ஈரோடு கிழக்கில் விசிக கட்சியினர் பரப்புரை. திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு செலுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை. நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்கு செலுத்தி விடாதீர்கள் என்று மக்களின் காலில் விழுந்து பரப்புரை செய்தனர்” என்று அந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

Screenshot From Facebook/Kabilan Tamilan
screenshot from Facebook/Solomon Jr.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

Also Read: கடலூர்-புதுச்சேரி புதிய சாலை என்று பகிரப்படும் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே புகைப்படங்கள்!

Fact Check / Verification

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்பதாக ஈரோடு கிழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மக்களின் காலில் விழுந்து பரப்புரை செய்தனர் என்பதாக நியூஸ்கார்ட் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று பரவிய நியூஸ்கார்டில் பரவாயில்லை என்கிற வார்த்தை எழுத்துப்பிழையுடன் பராவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. புதிய தலைமுறை நியூஸ்கார்ட் பெயரில் பரவிய வைரல் புகைப்படத்தில் தேதியும் அவர்களுடைய எழுத்துருவில் இருந்து மாறுபட்டிருந்தது.

Viral News card
PT News card Sample

எனவே, புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இதுகுறித்து ஆராய்ந்தபோது அவ்வாறு எந்த நியூஸ்கார்டும் பதிவாகவில்லை.

அதனால், புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவின் பொறுப்பாளர் இவானியை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது “வைரல் நியூஸ்கார்ட் போலியானது” என்று உறுதி செய்தார்.

Also Read: வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Conclusion

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்பதாக ஈரோடு கிழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மக்களின் காலில் விழுந்து பரப்புரை செய்தனர் என்பதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone Conversation With, Ivani Puthiyathalaimurai, Dated February 15, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular