சனிக்கிழமை, மே 4, 2024
சனிக்கிழமை, மே 4, 2024

HomeFact CheckFact Check: இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check: இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார்

Fact: வைரலாகும் வீடியோவில் இருப்பவர் பிரேசிலைச் சேர்ந்த ஒரு நடிகர் ஆவார்.  

இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”பரிசுத்த ஆத்மா போக முடியாத அளவுக்கு கேப் விடாம ஆடுறாங்கப்பா.” என்று இந்த வீடியோவை கனல் கண்ணன், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பலரும் பகிர்ந்துள்ளனர்.

இளம்பெண்ணுடன்
Screenshot from Twitter @Indumakalktchi

Archived Link

Screenshot from Twitter @kannan_kanal

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாக பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அதன்முடிவில் Inacio Falcao Falcão என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. மேலும், அந்நபரின் சுயவிவரக்குறிப்பில் அவர் ஒரு நடிகர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, நம்முடைய தேடலில் Boatos என்கிற போர்ச்சுகீசிய மொழி ஊடகத்தில் இந்த நபரின் நடனம் குறித்த செய்தி வெளியாகியிருந்தது. அதில், “June Festival நிகழ்வில் Papa popo என்கிற பாதிரியார் கதாப்பாத்திரத்தை உருவாக்கிய இனாசியோ ஃபால்கோ என்பவரின் நடனம்” என்று இந்த வீடியோ செய்தி பகிரப்பட்டிருந்தது.

மேலும், இனாசியோ ஃபால்கோ என்னும் இந்த நபரின் யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ வெளியாகியிருந்தது.

அவருடைய சுயவிவரக்குறிப்பில், “இனாசியோ ஃபால்கோ என்னும் நான் Caruaru-வில் பிறந்த நடிகன். Papa popo  Caruaru என்கிற பாதிரியார் கதாப்பாத்திரை உருவாக்கி நடித்து வருபவன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனாசியோ ஃபால்கோ என்னும் இந்த நடிகர் குறித்து கீ-வேர்டுகள் மூலமாகத் தேடியபோது,Conexão 4 என்கிற பிரேசிலிய ஊடகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இவரது பேட்டி ஒன்று கிடைத்தது. அதில், பாதிரியார் வேடத்தில் இந்த நடிகரின் புகைப்படங்களும், வேறு சில நடனக்காட்சிகளும் கூட இடம்பெற்றுள்ளன.

எனவே, வைரல் வீடியோவில் இருப்பவர் உண்மையான பாதிரியார் அல்ல; அவர் ஒரு நடிகர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

Also Read: இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனரா?

Conclusion

இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோ தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram Post From, Inacio Falcao Falcão, Dated June 20, 2023

Report From, Boatos, Dated June, 2023
Facebook Post From, Conexão 4, July 08, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular