ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024

HomeFact Checkபிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரா...

பிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரா குஷ்பு?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – குஷ்பு

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.

சமீபத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு குறித்து பொது மேடையில் அநாகரீகமாக பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னைப் பற்றி பேசிய வீடியோ வைரலானது போல் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குஷ்பு கூறியதாகநியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஷ்பு கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@GuyFawkes_____

Twitter Link | Archived Link

பிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஷ்பு கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/meena.catherine.9

Archived Link

பிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஷ்பு கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/mv.rajini.9

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் என்று பரவும் மியான்மர் வீடியோ!

Fact Check/Verification

பிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஷ்பு கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

இந்த ஆய்வில் குஷ்பு இவ்வாறு தகவலை குஷ்பு பேசியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தினமலரின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் அண்மையில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை.

தொடர்ந்து தேடியதில் “திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? – காங்கிரசுக்கு குஷ்பு சவால்” என்று தலைப்பிட்டு மே 19, 2022 அன்று தினமலர் நியூஸ்கார்ட் ஒன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தினமலர் ஆசிரியரான தண்டபாணியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என உறுதிப்படுத்தினார்.

இதனையடுத்து இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று தினமலர் தரப்பில் மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டதையும் நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் குஷ்புவும் இந்த தகவல் பொய்யானது என்று தெளிவுப்படுத்தி அவரது டிவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

Also Read: செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா?

Conclusion

பிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஷ்பு கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Facebook from Dinamalar, Dated May 19, 2022

Facebook from Dinamalar, Dated June 20, 2023
Phone Conversation with Dhandapani, Editor, Dinamalar, Dated June 20, 2023
Tweet from Khushbu Sundar, National Commission for Women, Dated June 20, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular