ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckViralதெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!

தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுகின்றது.
Fact: வைரலாகும் வீடியோவில் இருப்பது தெர்மோகோல் மறுசுழற்சியாகும்.

”தெர்மாகோல் வைத்து சர்க்கரை தயா‌ரிக்கும் ஆலை பிடிபட்டுள்ளதுஎன்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது

தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக வைரலாகும் தகவல்
Screenshot from Twitter@JNevilarchpauld
தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக வைரலாகும் தகவல்
Screenshot from Facebook / jeeva.kalees
தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக வைரலாகும் தகவல்
Screenshot from Facebook / gurusamy.nagarajan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினாரா பிரதமர்?

Fact Check/Verification

தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக  பிரித்து, ரிவர்ஸ் சர்ச் முறையை உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் Meh Chauhan எனும் யூடியூப் பக்கத்தில் ‘Thermocol recycling plant (தெர்மொகோல் மறுசுழற்சி செய்யப்படும் இடம்)என்று தலைப்பிட்டு இதே வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து ‘Thermocol recycling plant’ என்ற கீவேர்டை பயன்படுத்தி யூடியூபில் தேடுகையில் இதேபோன்று பல வீடியோக்களை காண முடிந்தது.

இதில் ‘Entrepreneur India TV’ எனும் பக்கத்தில் தெர்மோகோல் மறுசுழற்சி குறித்து விரிவாக விவரித்து வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. இந்த வீடியோவானது அக்டோபர் 19, 2020-இல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் மைக்ரோ கார்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலாளி சாந்திலால் ஜெயின் என்பவர் அந்த மறுசுழற்சி நிறுவனம் குறித்து விளக்கியிருந்தார்.

இதனையடுத்து நியூஸ்செக்கர் சார்பில் சாந்திலால் ஜெயினை தொடர்புக் கொண்டு வைரலாகும் வீடியோ குறித்து விசாரிக்கையில், தெர்மோகோல் மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் துகள்களாக மாற்றப்படுவதே இவ்வீடியோ என்று தெளிவுப்படுத்தினார். மேலும் போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக பரவும் தகவல் தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து காண்கையில் தெர்மோகோலை மறுசுழற்சிக்கு உட்படுத்தி,  சிறுசிறு பிளாஸ்டிக் துகள்களாக மாற்றி, மறுபடியும் அவற்றை பயன்பாட்டிற்கு மாற்றும் நிகழ்வானது போலி சர்க்கரை தயாரிக்கும் நிகழ்வு என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.

Also Read: சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகடுப்பில் சமைத்தாரா?

Conclusion

தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook post, from Meh Chauhan, Dated December 25, 2021
Facebook post, from Entrepreneur India TV, Dated October 19, 2020
Coversation with Shantilal Jain, owner of Micro Gartex Industries

(இத்தகவலானது நியூஸ்செக்கர் இந்தியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular