ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகிறேன் என்றாரா விஜய்?

தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகிறேன் என்றாரா விஜய்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகிறேன் என்றார் விஜய்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும்.  புதிய தலைமுறை இதை தெளிவு செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

இவ்விழாவில் “புஸ்ஸி ஆனந்த் ஒரு நல்ல தலைவர். தமிழகத்துக்கு நல்ல அரசியல் தலைவர்கள் தேவை; எனவே தான் புஸ்ஸி ஆனந்தை நான் கொண்டு வருகிறேன்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகின்றேன் என்று விஜய் கூறியதாக பரவும் தகவல்

X Link | Archive Link

தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகின்றேன் என்று விஜய் கூறியதாக பரவும் தகவல்

Archive Link

தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகின்றேன் என்று விஜய் கூறியதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check/Verification

தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகின்றேன் என்று தவெக தலைவர் விஜய் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து  விஜய் மேற்காணும் கருத்தை பேசினாரா என்பது குறித்து ஆராய்ந்தோம்.

அதில் விஜய் நேற்று கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய முழுப் பேச்சு சன் நியூஸ் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. இப்பேச்சில் அவர் முழுக்க முழுக்க மாணவர்களின் கல்வி, எதிர்காலம் குறித்தே பேசி இருந்தார். இளைஞர்கள் போதை பழக்கங்ளுக்கு அடிமையாக கூடாது என்று அவர் பேசியதோடு, இது தொடர்பான உறுதிமொழியையும் மாணவர்களிடம் வாங்கினார்.

இதுத்தவிர்த்து எந்த ஒரு இடத்திலும் புஸ்ஸி ஆனந்தை பொதுச்செயலாளராக அறிவித்தது குறித்தோ, அல்லது அவரை தமிழக அரசியலுக்கு கொண்டு அழைத்து வந்தது குறுத்தோ விஜய் பேசி இருக்கவில்லை.

சன் நியூஸ் தவிர்த்து வேறு சில ஊடகங்களில் விஜயின் பேச்சு பதிவேற்றப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றிலும் புஸ்ஸி ஆனந்த் குறித்து விஜய் பேசி  இருக்கவில்லை. அந்த வீடியோக்களை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனடிப்படையில் காண்கையில் தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகின்றேன் என்று விஜய் பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. ஆகவே புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட்  போலியானது, அதை புதிய தலைமுறை வெளியிடவில்லை  என தெரிவித்தார்.

இதனையடுத்து தேடுகையில் புதிய தலைமுறை இணையத்தளத்திலும் ‘இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை’ என்று வைரலாகும் இச்செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.

தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகின்றேன் என்று விஜய் கூறியதாக பரவும் தகவல்

Also Read: ‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று அட்டைப்படம் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

Conclusion

தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகின்றேன் என்று தவெக தலைவர் விஜய் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும்.

இந்த உண்மையை உரிய ஆதாரங்கள் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Sun News, Dated June 28, 2024
Report from Puthiya Thalaimurai, Dated June 28, 2024
Phone Conversation with Ivany, Digital head, Puthiya Thalaimurai

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular