ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: இலங்கையில் கண்ணிவெடிகள் நீக்கப்பட்டது என்கிற பதிவில் இடம்பெற்ற கம்போடியா நாட்டுப் புகைப்படம்!

Fact Check: இலங்கையில் கண்ணிவெடிகள் நீக்கப்பட்டது என்கிற பதிவில் இடம்பெற்ற கம்போடியா நாட்டுப் புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
இலங்கையில் நீக்கப்பட்ட கண்ணிவெடிகள் என்ற பதிவில் இடம்பெற்ற இலங்கையில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட இடத்தின் புகைப்படம்.


Fact
பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்டதல்ல; கம்போடியாவில் எடுக்கப்பட்டதாகும்.

இலங்கையில் கண்ணிவெடிகள் நீக்கப்பட்டது என்று பதிவு மூத்த பத்திரிக்கையாளர் கே.டி.ராஜசிங்கம் பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றுடன் பகிரப்பட்டுள்ளது.

”இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் புதைக்கப்பட்ட 878,700க்கும் மேற்பட்ட கண்ணி வெடிகள் மற்றும் வெடி பொருட்கள் கடந்த 2022ஆம் ஆண்டு வரை அகற்றப்பட்டுள்ளது. முகமலை பகுதியில் மட்டும் 369,015 உயிருள்ள வெடிமருந்துகள் மற்றும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. 111,193,280 செயல்பாட்டில் இருக்கும் வெடி மருந்து சுற்றுகள் நீக்கப்பட்டுள்ளன” என்று பகிரப்பட்டுள்ள செய்தியில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.

Screenshot From Twitter @RajasinghamT

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்தாரா?

Fact Check/Verification

இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டது குறித்த பதிவில் மூத்த பத்திரிக்கையாளர் கே.டி.ராஜசிங்கம் பெயரிலிருக்கும் ட்விட்டர் பக்கம் பதிவிட்ட புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலாவதாக, அவர் பதிவில் குறிப்பிடப்பட்டது போன்று செய்தி ஏதும் இலங்கையில் வெளியாகியிருக்கிறதா என்று தேடியபோது மார்ச் 14, 2023 அன்று Dily Mirror.lk என்கிற இலங்கை செய்தி ஊடகத்தில் “More than 800,000 mines removed since 2022, says demining organisation” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

அச்செய்தியில் இடம்பெற்றிருந்த வரிகளுடனேயே குறிப்பிட்ட புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, Daily Breeze என்கிற இணைய ஊடகம், கடந்த ஜனவரி 12, 2022 அன்று வெளியிட்டிருந்த “Rat who detected land mines in Cambodia dies in retirement” என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்த செய்தியில் இலங்கை பதிவில் இடம்பெற்றிருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அப்புகைப்படம் பற்றிய குறிப்பில், “கம்போடியாவில் கண்ணிவெடி அபாய அறிவிப்பு உள்ள இடத்தில் குழந்தைகள் விளையாடும் காட்சி” என்று தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அப்புகைப்படம் கடந்த 2005ஆம் வருடம் பதிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்தவர் புகைப்படக்கலைஞர் டேவிட் லாங்க்ஸ்ட்ரீத் (David Longstreath) என்று Associate Press பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Aljazeera, உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவன செய்திகளிலும் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

எனவே, இலங்கையில் கண்ணிவெடிகள் நீக்கப்பட்டதாக பகிரப்பட்ட பதிவில் இடம்பெற்ற புகைப்படம் இலங்கையைச் சேர்ந்ததல்ல;கம்போடியாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

Also Read: Fact Check: இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேசினாரா முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு?

Conclusion

இலங்கையில் கண்ணிவெடிகள் நீக்கப்பட்டதாக மூத்த பத்திரிக்கையாளர் கே.டி.ராஜசிங்கம் பெயரிலிருக்கும் ட்விட்டர் பக்கம் பதிவிட்ட செய்தி புகைப்படம் இலங்கையுடன் தொடர்புடையது அல்ல;கம்போடியாவைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
AP NewsRoom
News Report From, Daily Breeze, Dated January 12, 2022
Aljazeera


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular