Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தேசியக்கொடியை அவமதிக்கும் விவசாயிகள்
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு கடந்த 2023ஆம் ஆண்டு காலிஸ்தானிகளால் கனடாவில் நிகழ்ந்ததாகும்.
விவசாயிகள் போராட்டத்தின்போது இந்திய தேசியக்கொடியை அவமதித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“பாரதத்தின் தேசிய கொடியை அவமதிக்கும் இந்த கூட்டம் விவசாய கூட்டம் இதற்கு இங்கு முட்டு வேற” என்று இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக பரவும் எடிட் படம்!
விவசாயிகள் போராட்டத்தின்போது இந்திய தேசியக்கொடியை அவமதித்ததாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது இந்த வீடியோ கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதையும், அப்போதே நாம் நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் இதுகுறித்த உண்மைச்சோதனையை வெளியிட்டிருப்பதும் உறுதியாகியது.
அதன்படி, குறிப்பிட்ட வைரல் வீடியோ உண்மையில் கனடாவில் எடுக்கப்பட்டதாகும். காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து, காலிஸ்தான் ஆதரவான நபர்கள் சிலர் இந்தியக்கொடியை அவமதிக்கும் வீடியோ வெளியாகியது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ், டெக்கான் ஹெரால்டு உட்பட பல்வேறு ஊடகங்களிலும் கடந்த 2023லேயே செய்தி வெளியாகியுள்ளது.
அதுகுறித்த செய்திகளை இங்கே மற்றும் இங்கே பார்வையிடுங்கள். எனவே, வைரலாகும் வீடியோ கனடாவில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் தேசியக்கொடியை அவமதித்தபோது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?
விவசாயிகள் போராட்டத்தின்போது இந்திய தேசியக்கொடியை அவமதித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Hindustan Times, Dated July 09, 2023
Report from Deccan Herald, Dated September 27, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
May 13, 2024
Vijayalakshmi Balasubramaniyan
March 21, 2024
Vijayalakshmi Balasubramaniyan
March 6, 2024