ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஅனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணிணி வழங்குகின்றதா மத்திய அரசு?

அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணிணி வழங்குகின்றதா மத்திய அரசு?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் இலவச மடிக்கணிணி வழங்குப்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு தகவல் ஒன்றை பகிர்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார். அதில், மத்திய அரசு சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக மடிக்கணிணி வழங்கப்படுவதாகவும், இத்திட்டத்தில் பயன்பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Screenshot from WhatsApp Bot

நாம் மேலும் தேடியதில் சமூக வலைத்தளங்களில் பலரும் இதே தகவலை பகிர்ந்து வருவதை காண முடிந்தது.

அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் இலவச மடிக்கணிணி வழங்குப்படுவதாக பரவும் தகவல் - 01

Facebook Link

அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் இலவச மடிக்கணிணி வழங்குப்படுவதாக பரவும் தகவல் - 02

Facebook Link

Also Read: எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் விஷம பதிவு!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் இலவச மடிக்கணிணி வழங்குப்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, வைரலாகும் தகவலுடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தோம். இதனைத்தொடர்ந்து https://indiaglaptop.blogspot.com/ என்கிற இணையத்தள முகவரியுள்ள மற்றொரு பக்கம் திறக்கப்பட்டது.

அப்பக்கத்தில் மாணவரின் பெயர் மற்றும் கல்வித்தகுதி கேட்கப்பட்டது. அதில் பொய் பெயர் மற்றும் கல்வித்தகுதியை பூர்த்தி செய்து ‘Send’ பட்டனை அழுத்தியுடன் மற்றொரு பக்கம் திறக்கப்பட்டது. அப்பக்கத்தில் இத்தகவலை 5 வாட்ஸ்ஆப் குரூப்புகள் அல்லது 15 நண்பர்களுக்கு பகிர வேண்டும் என்று என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் இலவச மடிக்கணிணி வழங்குப்படுவதாக பரவும் தகவல் - 04

பொதுவாக மத்திய அரசின் திட்டம் தொடர்பான இணையத்தளமாக இருப்பின், அது gov.in என்றே முடியும். ஆனால் இதில் blogspot.com என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போதாதற்கு மற்றவர்களுக்கும் இத்தகவலை பகிருமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையெல்லாம் வைத்து பார்க்கையில் இது போலியான இணையத்தளம் என்பது தெளிவாகின்றது.

மேலும் தொடர்ந்து தேடுகையில், மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவச மடிக்கணிணி வழங்குவதாக எந்த திட்டமும் நடைமுறையில் இல்லை என்று PIB சார்பில் உறுதி செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது.

Also Read:  உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக பரவும் புகைப்படம்!

Conclusion

அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் இலவச மடிக்கணிணி வழங்குப்படுவதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

PIB Factchecks Tweet, tweeted on 02/06/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular