திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkகத்தாரில் காரை நசுக்கும் ஆக்டோபஸ் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

கத்தாரில் காரை நசுக்கும் ஆக்டோபஸ் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கத்தாரில் கார் ஒன்றை நசுக்கும் ஆக்டோபஸ்
Fact: வைரலாகும் வீடியோ காட்சி CGI செய்யப்பட்டதாகும்.

கத்தாரில் கார் ஒன்றை ஆக்டோபஸ் கடலிலிருந்து வந்து நசுக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“ஆக்டோபாஸ் என்னும் கடல்வாழ் உயிரினம் கத்தார் கடலில் இருந்து வழிதவறி கார் பார்க் அடைந்து காரை நொறுக்குகிறது..பஞ்சு மாதிரியான உடல் அமைப்பு கொண்டிருந்தாலும் அதன் வலிமையை என்னவென்று சொல்வது” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

கத்தாரில்
Screenshot from X @Narasim18037507

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

கத்தாரில் கார் ஒன்றை ஆக்டோபஸ் நசுக்குவதாகப் பரவும் வீடியோ காட்சி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

பரவி வருகின்ற வீடியோ காட்சியை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். நம்முடைய தேடலின் முடிவில் ghost3dee என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த செப்டம்பர் 25, 2023 அன்று அலெக்ஸ் என்கிற கிராபிக் தொழில்நுட்ப கலைஞர் இந்த வீடியோவினை வெளியிட்டுள்ளார் என்பது நமக்குத் தெரிய வந்தது.

Instagram will load in the frontend.

அதிலேயே, இந்த வீடியோ கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டது என்று விளக்கியுள்ளார் அலெக்ஸ். அவருடைய X பக்கம் மற்றும் யூடியூப் பக்கங்களிலும் இந்த வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

Conclusion

கத்தாரில் கார் ஒன்றை ஆக்டோபஸ் நசுக்குவதாகப் பரவும் வீடியோ காட்சி CGI செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Insta Post From, Alex Z, Dated September 25, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular