ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkசந்திராயன் 3 வெற்றிக்காக விரதம் இருக்கின்றாரா பிரதமர் மோடி?

சந்திராயன் 3 வெற்றிக்காக விரதம் இருக்கின்றாரா பிரதமர் மோடி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சந்திராயன் 3 வெற்றிக்காக விரதம் இருக்கின்றார் பிரதமர் மோடி

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி அவரின் பிரான்ஸ் பயணம் முழுவதும் உப்பு, வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்குகள் சேர்க்காத உணவுகள் உட்கொண்டு விரதம் இருப்பதாக கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி விரதம் இருப்பதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@Mini52614198

Twitter Link | Archived Link

சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி விரதம் இருப்பதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/babushanthi

Archived Link

சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி விரதம் இருப்பதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/m.suresh.india

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி விரதம் இருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.  அதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை.

ஆனால் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள அதே தேதியில் (13/07/2023) பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றதை குறித்து நியூஸ்கார்ட் ஒன்றை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத் குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: சந்திரயான்-3 வெற்றிக்கு கடவுள் வெங்கடாசலபதியே காரணம் என்றாரா நாராயணன் திருப்பதி?

Conclusion

சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி விரதம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Thanthi TV, Dated July 13, 2023

Phone Conversation with Vinoth Kumar, Thanthi TV

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular