செனாப் நதியை மீண்டும் திறந்து பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் பிரதமர் மோடி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதி. 𝟭𝟬 பைசா செலவில்லாம மரண பயத்தை காட்டும் நரேந்திர மோடி ஜி.” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
செனாப் நதியை மீண்டும் திறந்து பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ”Another strong and dangerous storm. Badakhshan city.” என்பதாக கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றிருந்த பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது.

மேலும், கடந்த ஏப்ரல் 14, 2025 அன்று இந்த வீடியோ ஆப்கானிஸ்தானில் கடுமையான வெள்ளப்பெருக்கு என்கிற செய்தியுடன் Hamidreza-satar என்கிற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
அதுமட்டுமின்றி, மேலும் பல்வேறு சமூக வலைத்தளப்பக்கங்களிலும் இந்த ஆப்கன் வெள்ளப்பெருக்கு வீடியோ கடந்த ஏப்ரல் மாதமே பதிவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோவே தற்போது செனாப் நதி திறக்கப்பட்டுள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.
Also Read: பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இந்து குடும்பத்தை இஸ்லாமியர்கள் தாக்கினரா?
Conclusion
செனாப் நதியை மீண்டும் திறந்து பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ ஆப்கானிஸ்தான் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Hamidreza-satar, Dated April 14, 2025
Instagram Post From, Hura12.1, Dated April 12, 2025