துபாய் செல்லும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாயில் நடைபெற்று வருகின்ற சர்வதேச தொழில் கண்காட்சியில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், “துபாய் செல்லும் போது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என நிதியமைச்சர் PTR தகவல்” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது என்றாரா சுகி சிவம்?
Fact Check/Verification
துபாய் செல்லும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என்று நிதியமைச்சர் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட பதிவு, கேலி செய்யும் வகையில் இடம்பெற்றிருந்தாலும் பலரும் அதை உண்மை என்பதாக பதிவிட்டு வருகின்றனர். எனவே, இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பார்வையிட்டோம்.
அப்போது, தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனே, குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியாக பரப்பப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
“TN காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது” என்கிற எச்சரிக்கை குறிப்புடன் விளக்கமளித்துளார்.
குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியானது என்பதை நியூஸ் 7 தரப்பிலும் உறுதி செய்து கொண்டோம்.
Conclusion
துபாய் செல்லும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என்று நிதியமைச்சர் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
PTR Twitter
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)