வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

HomeEntertainmentதி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்தாரா?

தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்தார்
Fact: தேவலீனா அப்படத்தில் நடிக்கவே இல்லை

“கேரளா ஸ்டோரி நடிகை தேவலீனா ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டார்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screenshot from Facebook/shajahan.banu.984
தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screenshot from Facebook/dhanasekaran.annamalai
தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screenshot from Facebook//mohamed.shadiq.75

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று ஈபிஎஸ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்ததாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் வைரலாகும் தகவலில் பல பொய்கள் இருப்பதை அறிய முடிந்தது.

நடிகை தேவலீனா இந்தி தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்துள்ளார். ஆனால் அவர் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடிக்கவே இல்லை என்பது நம் ஆய்வில் தெரிய வந்தது.

உலக அளவில் திரைத்துறை குறித்த தகவல்களை கொண்டுள்ள IMDB இணையத்தளத்தில் இப்படத்தில் நடித்தவர்கள் குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. அதில் தேவலீனாவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screengrab from IMDB

தொடர்ந்து தேடுகையில் தேவலீனாவே அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் அவர் நடிக்கவில்லை என்று தெரிவித்திருந்ததை காண முடிந்தது.  

தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screengrab from Devoleena’s twitter handle

அடுத்து வைரலாகும் படம் குறித்து ஆய்வு செய்ததில், அப்படத்தில் தேவலீனாவுடன் இருப்பவர் அவரது கணவர் அல்ல, தொலைக்காட்சி நடிகர் விஷால் சிங் என்று தெரிய வந்தது. தேவலீனாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் விஷால் சிங் பதிவு பதிவிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.  

Instagram will load in the frontend.

அடுத்து தேவலீனா திருமணம் குறித்து தேடுகையில், அவரது திருமணம் தற்போது  நடைப்பெறவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் ஆம் தேதி நடந்துள்ளது என அறிய முடிந்தது. அவர் ஷானாவாஸ் எனும் இஸ்லாமியரை திருமணம் செய்துள்ளார்.

Instagram will load in the frontend.

Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

Conclusion

நடிகை தேவலீனா தி கேரளா ஸ்டோரியில் நடித்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Tweet from Devoleena Bhattacharjee, dated May 19, 2023

IMDB Data
Devoleena Bhattacharjee’s Instagram post, Dated December 14, 2022
Vishal Singh’s Instagram post, Dated December 14, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular