சனிக்கிழமை, ஜூன் 15, 2024
சனிக்கிழமை, ஜூன் 15, 2024

HomeFact Checkமோடி தனக்கென்று தனிவிமானம் வாங்கினாரா?

மோடி தனக்கென்று தனிவிமானம் வாங்கினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் தனக்கென்று சொகுசு தனிவிமானம் வாங்கியதாக குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் ஜோதிமணி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில்,

இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை. ஏர் இந்தியா விமானத்தையே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஏழைத்தாயின் மகன் 8000 கோடி ரூபாய் பொதுமக்கள் வரிபணத்தில் சொகுசு தனிவிமானம் வாங்கியிருக்கிறார்.

என்று மோடிக் குறித்து குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

ஜோதிமணி அவர்களின் டிவீட்.

இதேக் குற்றச்சாட்டைப் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேட்டு வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டின் உண்மைப் பின்னணி என்ன என்பதை அறிய இதுக்குறித்து நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.

Fact Check/Verification

பிரதமர் மோடி குறித்தும், அவர் அவருக்கென்று செய்யும் செலவுகள் குறித்தும் விமர்சனங்கள் வருவது என்பது தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கும் நிகழ்வாகும்.

உதாரணத்திற்கு அவர் உடுத்தும் ஆடைகளின் விலை, அவரின் தொடர் வெளிநாட்டுப் பயணங்கள் என்று பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வரிசையில் இந்த விமான விஷயம் கடந்த ஒரு வருடங்களாகவே பேசுப் பொருளாக உள்ளது.

அதேபோல் இந்த தனிவிமானம் குறித்துப் பல பொய் செய்திகள் பரவுவது தொடர்ந்த வண்ணம் உள்ளது.  உதாரணத்திற்கு இந்த விமானத்தின் உட்படம் என்று சிலப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவி வந்தன.

நம் நியூஸ்செக்கர் சார்பில் அவற்றை ஆராய்ந்து அவை தவறானப் புகைப்படங்கள் என்று நிரூபித்திருந்தோம்.

அக்கட்டுரையைப் படிக்க: https://tamil.newschecker.in/fact-checks/the-viral-image-is-not-modis-aircraft/

புதிய வேளாண் சட்ட மசோதாக்களுக்கு  எதிராக நடத்தப் பேரணியில் ராஜீவ் காந்தி அவர்கள் சோஃபாவில் அமர்ந்து சென்றதைக் குறித்து பத்திரிக்கையாளர் கேள்விகள் கேட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் அவர்கள் இந்த விமானம் குறித்த சர்ச்சையை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார்.

உண்மை என்ன?

உண்மையில் மோடி அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் தனது வசதிக்காக இந்த விமானத்தை வாங்கினாரா என்பதை அறிய இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

நமது ஆய்வில், ANI தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைவெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இதன்பின், இவ்விஷயத்தின்பின்னணியில் இருந்த உண்மையை நம்மால் அறிய முடிந்தது. 

உண்மையில், இந்த விமானத்தை வாங்கும் திட்டமானது மோடி அவர்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல. இது காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தப்போது ஏற்படுத்தப்பட்டத் திட்டமாகும்.

மோடி அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

ANI-யின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:

இதே விஷயத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கன் ஹெரால்ட் உள்ளிட்ட ஊடகங்களும் கூறியுள்ளது.

தனிவிமானம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்தச் செய்தி.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்தச் செய்தி.
தனிவிமானம் குறித்து டெக்கன் ஹெரால்டில் வந்தச் செய்தி.
டெக்கன் ஹெரால்டில் வந்தச் செய்தி.
மேலும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இருந்ததாவது:

இந்த இரண்டு விமானங்களும் பிரதமருக்காக மட்டுமல்ல. மற்ற மிக முக்கிய நபர்களுக்காகவும்தான். இந்த விமானங்கள் இந்திய விமானப் படைக்குச் சொந்தமானது. பிரதமருக்கு அல்ல.

பிரதமர் பயன்படுத்திய பழைய விமானங்கள் 25 ஆண்டுகள் பழமையானது. இவை அதிகம் எரிபொருளை உட்கொள்ளக் கூடியவை. ஆகையால் அடிக்கடி எரிபொருள் மாற்ற வேண்டிய கட்டாயம் இதில் உள்ளது. ஆகவே இதை மாற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

மேலும் இவ்விமானங்களில் பிரதமரைத் தவிர்த்து, குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பயணம் செய்யலாம்.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் நமக்குத் தெளிவாகுவது என்னவென்றால்,

  • ராஜீவ் காந்தி, ஜோதிமணி மற்றும் சமூக வலைத் தளங்களில் கூறியதுப் போல புதிதாக வாங்கப்பட்ட விமானங்கள் மோடி அவர்களால் அவருக்காக வாங்கப்பட்டதல்ல.
  • இந்த தனிவிமானம் வாங்கும் திட்டமானது, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டத் திட்டம்.
  • இவ்விமானங்களில் பிரதமரைத் தவிர்த்து பிரதமரைத் தவிர்த்து, தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பயணம் செய்யலாம்.

Result: False/Fabricated


Our Sources

Jothinani’s Twitter Profile: https://twitter.com/jothims/status/1313708225720508416

Twitter Profile: https://twitter.com/ezhuchii/status/1313734591404859392

Twitter Profile: https://twitter.com/DmkMallai/status/1313720767662583816

Times Of India: https://timesofindia.indiatimes.com/india/rahul-attacks-pm-over-vvip-aircraft-govt-sources-say-procurement-process-began-under-upa/articleshow/78518486.cms

Deccan Herald: https://www.deccanherald.com/national/vvip-plane-acquisition-process-began-under-upa-modi-govt-brought-it-to-conclusion-govt-sources-898342.html


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular