திங்கட்கிழமை, ஜூன் 17, 2024
திங்கட்கிழமை, ஜூன் 17, 2024

HomeFact Checkஅடல் சுரங்கப்பாதை என்று தவறானப் புகைப்படத்தைப் பரப்பும் ஊடகங்கள்

அடல் சுரங்கப்பாதை என்று தவறானப் புகைப்படத்தைப் பரப்பும் ஊடகங்கள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறக்கப்பட்டது.

அடல் சுரங்கப்பாதைத் திறப்புக் குறித்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்தபோது, கூடவே புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்து, அதுதான் அடல் சுரங்கப்பாதை என்றும் கூறி வருகின்றனர்.

இதேப் புகைப்படத்தை ஏசியாநெட் நியூஸ், பாலிமர் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களும் பயன்படுத்தி  உள்ளன.

அடல் சுரங்கப்பாதை குறித்து ஏசியாநெட் நியூஸில் வந்தச் செய்தி.
ஏசியாநெட் நியூஸில் வந்தச் செய்தி.
அடல் சுரங்கப்பாதை குறித்து பாலிமரில் வந்தச் செய்தி.
பாலிமரில் வந்தச் செய்தி

Fact Check/Verification

இமாச்சலப் பிரதேசத்தில்  மாபெரும் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதைக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவாக அடல் சுரங்கபாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை மூலம் மணாலி மற்றும் லே இடையேயான பயணத் தொலைவு 46 கிலோ மீட்டர் குறையும். இதனால் பயண நேரமானது 4 முதல்  5 மணி நேரம் வரை குறைக்கப்படும்.

இச்சுரங்கப்பாதைக் குறித்து மோடி அவர்கள், “ இந்த அடல் சுரங்கப்பாதை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டமாகும். இதன் மூலம் பல இந்தியர்கள் பலனடைவார்கள். இது மூலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக சுற்றுலாத் துறை மற்றும் விவசாயத் துறை மிகப்பெரிய இலாபம் பெறும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.  

பிரதமரின் டிவிட்டர் பதிவு.

உண்மை என்ன?

சமூக வலைத் தளங்கள் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தப்படும்  இந்தப் படமானது உண்மையில் அடல் சுரங்கப்பாதையின் படமல்ல. அது கலிஃபோர்னியாவில் உள்ள டாம் லேண்டோஸ் சுரங்கப்பாதையின் புகைப்படமாகும்.

இப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தப்போது எங்களால் உண்மையை அறிய முடிந்தது.

நாங்கள் இப்படம் குறித்து தீவிரமாக தேடுகையில்  cruiserclothing.com எனும் இணையத் தளத்தில்,  “Inside the devil’s slide tunnel” எனும் தலைப்பில் பதிவு ஒன்று இருந்ததை நாங்கள் கண்டோம். அதில் இப்படமும் இடம்பெற்றிருந்தது.

மேலும் இதுக்குறித்து நாங்கள் தேடுகையில் HNTBcorp எனும் யூடியூப் பக்கத்தில்  டாம் லேண்டோஸ் சுரங்கப்பாதையின் துவக்க விழாக் குறித்த வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் ஊடகங்களில் பயன்படுத்தப்படும் புகைப்படத்தில் காணப்படும் சுரங்கப்பாதையை நம்மால் காண முடிகிறது.

அவ்வீடியோ உங்களுக்காக:

Source: HNTBcorp

மேலும் அடல் சுரங்கப்பாதையின் முகப்புத் தோற்றம் குறித்து தேடினோம். அத்தேடலில் நமக்கு கிடைத்தப் படங்களுடன் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில், ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட படம் உண்மையான அடல் சுரங்கப் பாதையுடன் ஒற்றுப் போகவே இல்லை.

வாசகர்களின் புரிதலுக்காக பத்திரிக்கைகளில் பயன்படுத்தப் படத்தையும், அடல் சுரங்கப்பாதையின் இருப்புற வாயிலின் புகைப்படத்தையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

அடல் சுரங்கபாதை குறித்த ஒப்பீடுப் படம்.
முதல் படம்: தென் வாயில், நடுப் படம்: பத்திரிக்கைகளில் பயன்படுத்தப்பட்டப் படம்,
கடைசிப் படம்: வடக்கு வாயில்

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் அடல் சுரங்கப்பாதை என்று சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டப் புகைப்படமானது, உண்மையில் அடல் சுரங்கப்பாதையின் புகைப்படமல்ல என்பதும் அது கலிஃபோர்னியாவின் டாம் லேண்டோஸ் சுரங்கப்பாதையின் படம் என்பதும் தெளிவாகியுள்ளது.

Result: Misleading


Our Sources

Twitter Profile: https://twitter.com/njadeja04/status/1312048336321482753

Twitter Profile: https://twitter.com/Dhinaexpress1/status/1312291193733046272

Polimer News: https://twitter.com/murugarajg87/status/1312256567631245313https://www.polimernews.com/dnews/118707/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D—%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%878.8-%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-,%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3,000%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88–%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Asianet News: https://tamil.asianetnews.com/world/rohtang-atal-tunnel-disturbs-china-modi-opens-on-october-3–qh5emu

Twitter Profile: https://twitter.com/murugarajg87/status/1312256567631245313

HNTBcorp: https://www.youtube.com/watch?v=pPUeq19l8G0

cruiserclothing.com: https://www.cruiserclothing.com/blog/inside-the-devils-slide-tunnel

PM’s Twitter Profile: https://twitter.com/narendramodi/status/1312397856469213186


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular