ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகிணறு தோண்டும்போது பீறிட்ட வெள்ளம்; வைரலாகும்  வீடியோ அமராவதி மாவட்டத்தில் எடுக்கப்பட்டதா?

கிணறு தோண்டும்போது பீறிட்ட வெள்ளம்; வைரலாகும்  வீடியோ அமராவதி மாவட்டத்தில் எடுக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் கிணறு தோண்டும்போது தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் 5 பேர் இறந்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் கிணறு தோண்டும்போது தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் 5 பேர் இறந்ததாக பரவும் தகவல்
Source: Facebook

வாசகர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு வீடியோ ஒன்றை பகிர்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரித்திருந்தார்.

வாசகர் பகிர்ந்த அந்த பதிவில், “மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள அசாத்பூர் (ரங்கர்வசானி), கானாபூர் (சிச்கேடா) கிராமத்தில் விவசாயி மகேந்திர பகத் என்ற விவசாயி மகேந்திர பகத் என்பவரது வயலில் கிணறு தோண்டும்போது திடீரென தண்ணீர் வேகமாக வெளியேறியதால் கிணற்றில் பணிபுரிந்த 5 தொழிலாளர்கள் உடனடியாக உயிரிழந்தனர். யாரும் அருகில் நிற்க முடியாத அளவுக்கு தண்ணீர் வேகமாக வெளியேறுவது இயற்கையின் அதிசயம் என்று கூறப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Screenshot of WA Bot

சமூக ஊடகங்களில் மேலும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதை நம்மால் காண முடிந்தது.

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் கிணறு தோண்டும்போது தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் 5 பேர் இறந்ததாக பரவும் தகவல் -

Facebook Link

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் கிணறு தோண்டும்போது தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் 5 பேர் இறந்ததாக பரவும் தகவல் - 3

Facebook Link


Also Read:
 அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பொய் தகவல்!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் கிணறு தோண்டும்போது தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் 5 பேர் இறந்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோ குறித்து நாம் தேடுகையில்,நான்கு வருடங்களுக்கு முன்பு அக்டோபர் 26, 2018 அன்று PLL News எனும் யூடியூப் பக்கத்தில் இதே வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஆனால் PLL News-ல் இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தை சேர்ந்த ராம்பூரில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இச்சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேடுகையில், வைரலாகும் இச்சம்பவமானது  வெவ்வேறு இடங்களில்  நடந்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது.

Grameenchal News எனும் யூடியூப் பக்கத்தில் இச்சம்பவமானது மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தின் ஜார் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JBK Marwadi Geet  எனும் யூடியூப் பக்கத்தில் மார்ச் 31, 2022 அன்று இவ்வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்ததிருந்தது. இதில் இச்சம்பவமானது மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தின் பாமரோலி பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் அமராவதியில் நடந்ததா என உறுதி செய்ய,  அமராவதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு விசாரித்தோம். “இவ்வாறு சம்பவம் இப்பகுதியில் நடக்கவில்லை, இது தவறான செய்தி” என்று அவர்கள் பதிலளித்தனர்.

இதன்பின் ஆச்சல்பூர் தாசில்தார் மதன் ஜாதவ்வை தொடர்புக் கொண்டு விசாரித்ததில், அவரும் இது பொய்யான செய்தி என்று உறுதி செய்தார்.

இதனையடுத்து இச்சம்பவம் உண்மையில் எங்கு நடந்தது என்பது குறித்து தேடினோம். ஆனால் இதுகுறித்து நமக்கு தெளிவான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கிடைக்கும் பட்சத்தில் இக்கட்டுரையில் அப்டேட் செய்யப்படும்.

Also Read: ஜேஎன்யு விவகாரம்: காவல்துறையினர் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்தனரா?

Conclusion

நமது ஆய்வில், அமராவதியில் கிணறு தோண்டும்போது தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் 5 பேர் இறந்ததாக வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவமானது கடந்த நான்கு வருடங்களாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடந்ததாக பரவி வருவதை காண முடிகின்றது.

இம்முறை இச்சம்பவம் மகாராஷ்டிராவின் அமராவதியில் பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால் இச்சம்பவம் கண்டிப்பாக அமராவதியில் நடைப்பெறவில்லை என்பது கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False Context / False

Source

Conversation with Amravati District Collector’s Office over
Phone Conversation with Achalpur Tehsildar Madan Jadhav over the phone


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular