Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஜேஎன்யு பல்கலைகழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடமிருந்து டெல்லி காவல்துறையினர் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கடந்த ஞாயிறன்று, டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு ) வளாகத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தை (ஏபிவிபி) சேர்ந்த மாணவர்களுக்கும் தேசிய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) மற்றும் இடது சாரி மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்துள்ளது.
பல்கலைக் கழக வளாகத்தில் ராம நவமியை ஒட்டி நேற்று அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் காவேரி விடுதியில் அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக இடது சாரி மாணவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்த மாணவர்கள் ராம நவமியை ஒட்டி பூஜை மேற்கொள்ள விடாமல் இடதுசாரியினர் தாக்கியதாகக் ஏபிவிபி தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஜேஎன்யு பல்கலைகழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடமிருந்து டெல்லி காவல்துறையினர் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பொய் தகவல்!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஜேஎன்யு பல்கலைகழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடமிருந்து டெல்லி காவல்துறையினர் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இவ்வாறு செய்ததில் இந்நிகழ்வானது ஜேஎன்யுவில் நிகழவில்லை என்பதை அறிய முடிந்தது.
இந்நிகழ்வானது உத்திரப் பிரதேசத்தின் மைன்புரி பகுதியில் நடைப்பெற்றுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவை சார்ந்த அரவிந்த் சௌகான் எனும் பத்திரிக்கையாளர் இந்த வீடியோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் பெயர் கரீஷ்மா யாதவ், இவர் ஒரு அனாதை பெண். அவரது பாதுகப்புக்காக அவர் கைத்துப்பாக்கியை வைத்திருந்துள்ளார். உணவகத்தில் இவர் உறவினருடன் மதிய உணவை உண்ணும்போது இவர் இடுப்பில் நாட்டு துப்பாக்கி இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.” என்று போலீசார் இவரிடம் கூறியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.
மைன்புரி போலீசாரும் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் இந்நிகழ்வு குறித்து பதிவிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த பெண் ஒரு ஆசிரியை இல்லை என்று தெரிய வந்துள்ளது. எதற்காக இப்பெண் கைத்துப்பாக்கி வைத்திருந்தார். எங்கிருந்து இதை வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிகழ்வு குறித்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது. அதை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
Also Read: கடத்தல் மண் எடுத்து தரப்படும்; வைரலாகும் பெயர் பலகையின் உண்மை பின்னணி!
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது என்னவென்றால், ஜேஎன்யு பல்கலைகழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடமிருந்து டெல்லி காவல்துறையினர் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
உண்மையில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் பெண் மாணவியே அல்ல. அதேபோல் சம்பவம் நடந்தது ஜேஎன்யுவில் அல்ல, மைன்புரியில் ஆகும். இவரை கைது செய்தது டெல்லி போலீசார் அல்ல, மைன்பூரி போலீசார் ஆவார்.
இந்த உண்மைகளையெல்லாம் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Source
Mainpuri Police Tweet
Arvind Chauhan
Media Outlet’s Articles
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 4, 2022
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
March 25, 2022