Fact Check
ஜன்னல் கம்பி உடைந்த திராவிட மாடல் பேருந்து என்று பரவும் 2016ஆம் ஆண்டு புகைப்படம்!
Claim
ஜன்னல் கம்பி உடைந்த திராவிட மாடல் பேருந்து
Fact
வைரலாகும் புகைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டுடன் தொடர்புடையதாகும்.
ஜன்னல் கம்பி உடைந்த திராவிட மாடல் பேருந்து என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”திராவிட மாடல் ஆட்சி” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
ஜன்னல் கம்பி உடைந்த திராவிட மாடல் பேருந்து என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2022ஆம் ஆண்டு ஒன் இந்தியா ஊடகத்தில் வெளியாகியிருந்த மீம் ஒன்றில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

அந்த மீமை மீண்டும் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஏப்ரல் 17, 2016 அன்று “வெயில் காலத்துல கவர்மெண்ட் பஸ்லயும்…குளிர் காலத்துல பிரைவேட் பஸ்லயும்…
போறவன் தான் புத்திசாலி…” என்கிற வாசகங்களுடன் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அந்த 2016ஆம் ஆண்டு ஆட்சியில் இடம்பெற்றிருந்தது அஇஅதிமுக தலைமையிலான ஆட்சி ஆகும்.
Also Read: இந்திய ராணுவத் தாக்குதலால் பாகிஸ்தானில் அணுக்கசிவு என்று பரவும் கடிதம் உண்மையா?
Conclusion
ஜன்னல் கம்பி உடைந்த திராவிட மாடல் பேருந்து என்று பரவும் புகைப்படம் 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from One India Tamil, Dated April 27. 2022
Facebook Post From, Semma kalaai semma kalaai, Dated April 17, 2016