Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim : வாழும் காமராஜர் அண்ணாமலையை இழக்கத் தயாரில்லை- சிறுவன் பதாகை
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். கடந்த 2020ஆம் ஆண்டு #Goback Amitshah என்று இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
வாழும் காமராஜர் அண்ணாமலையை இழக்கத் தயாரில்லை என்று சிறுவன் ஒருவர் கைகளில் பதாகை பிடித்திருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”எங்கள் மூதாதையர்கள் செய்த தவறால் காமராஜரை இழந்தோம். மீண்டும் ஒரு தவறை செய்து வாழும் காமராஜர் அண்ணாமலையை இழக்க நான் தயாரில்லை!!! நீங்கள்?” என்பதாக அந்த சிறுவன் கைகளின் வைத்திருக்கும் பதாகையில் எழுதப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: எடப்பாடியாராக மாறிய கிங் கோலி என்று பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!
வாழும் காமராஜர் அண்ணாமலை என்று சிறுவன் ஒருவர் பதாகை பிடித்திருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் Guhan என்கிற ட்விட்டர் பயனாளர் இப்புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அச்சிறுவன் கைகளில் வைத்திருக்கும் பதாகையில், “#GoBack Amitshah” என்று எழுதப்பட்டுள்ளது.
தொடர்ந்து இப்புகைப்படத்தை பலரும் 2020ல் ஷேர் செய்துள்ளனர். அதில், Comrade From Kerala என்பவர் இப்புகைப்படத்தை “Standing in solidarity with TN who unites in one voice” என்று ஷேர் செய்துள்ளார். அந்த பதிவு பலராலும் பகிரப்பட்டுள்ளது. எனினும், அவர் கைகளில் இருக்கும் #GoBack Amit shah என்கிற பதாகையும் உண்மையா என்பதை அறிய முடியவில்லை.
இப்புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் குறித்து அறிய முடியவிட்டாலும் கூட, தற்போது வைரலாகும் அண்ணாமலை பற்றிய பதாகையை இச்சிறுவன் பிடித்திருப்பதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது இதன் மூலமாக தெளிவாகிறது.
Also Read: Fact Check: உத்திரகோசமங்கை மரகத நடராஜர் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறியதா?
வாழும் காமராஜர் அண்ணாமலை என்று சிறுவன் ஒருவர் பதாகை பிடித்திருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Twitter Post From, Guhan, Dated November 21, 2020 Twitter Post From, Comrade from Kerala, November 21, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
March 26, 2025
Ramkumar Kaliamurthy
March 18, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 24, 2025