சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஎடப்பாடியாராக மாறிய கிங் கோலி என்று பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

எடப்பாடியாராக மாறிய கிங் கோலி என்று பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim : ”எடப்பாடியாராக மாறிய கிங் கோலி”- சன் நியூஸ் நியூஸ்கார்ட்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

எடப்பாடியாராக மாறிய கிங் கோலி என்கிற வாசகங்களுடன் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“எதே எடப்பாடியாரா….அடேய் எவன் தவழ்ந்தாலும் எடப்பாடி னு சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா…சூப்பர்” என்றெல்லாம் பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த நியூஸ்கார்டினை பகிர்ந்து வருகின்றனர்.

Screengrab from Facebook/dharsa.priyan
Screengrab from Facebook/manikandavivek.manikandavivek
Screengrab from Facebook/IliyasPuduvai

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விவேகானந்தரின் தத்துவத்தால் கவரப்பட்டு டாட்டா நிறுவனத்தை ஜாம்செட்ஜி டாடா உருவாக்கினார் என்று பிரதமர் பேசியதாக பரவும் தவறான தகவல்!

Factcheck / Verification

எடப்பாடியாராக மாறிய கிங் கோலி என்ற வாசகங்களுடன் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ஏப்ரல் 16ஆம் தேதியன்று, விராத் கோஹ்லி தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில், “இதயம் இன்னும் குழந்தையாக இளமையாகவே இருக்கிறது” என்பதாக புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார்.

Instagram will load in the frontend.

இதனைத் தொடர்ந்து, சன் நியூஸ் இப்புகைப்படத்தை “ஏய் ஈனா மீனா டீகா! குழந்தையாக மாறிய ‘கிங்’ கோலி!” என்று நியூஸ்கார்டாக பதிவிட்டுள்ளது.

அந்த நியூஸ்கார்டினை எடுத்து, அதில் குழந்தையாக என்கிற வார்த்தையை எடப்பாடியாராக என்று எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.

Original News Card
Fake News Card

இதுகுறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜ் கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரல் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.

Also Read: Fact Check: உத்திரகோசமங்கை மரகத நடராஜர் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறியதா?

Conclusion

எடப்பாடியாராக மாறிய கிங் கோலி என்ற வாசகங்களுடன் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post From, Sun News Tamil, Dated April 16, 2023
Phone Conversation With, Manoj Karthik, Sun News Digital, Dated April 18, 2023 Instagram Post From, Virat Kohli, Dated April 16, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular