சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkமாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் – ஈ.பி.எஸ்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

சேலம் மாவட்ட செயலாளராக இருந்த என்னைக் குறிப்பிடும் வகையில் கதை இருப்பதால் மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@Ranjith71130394

Twitter Link | Archived Link

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/vijay.bose1974

Facebook Link

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/anbuselvan.anbuselvan.92

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டினாரா?

Fact Check/Verification

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி  கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இவ்வாறு அவர் பேசவே இல்லை” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ‘மாமன்னன் படம் ஓடுனா என்ன, இல்லனா என்ன’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

இதனையடுத்து தேடியதில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாமன்னன் படத்தை தாக்கி எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதை அறிய முடிந்தது.

இதுக்குறித்த ஊடகச் செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

Also Read: அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Puthiya Thalaimurai, Dated July 05, 2023

Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Phone Conversation with Kovai Sathyan, Spokes Person, AIADMK
Report from Puthiya Thalaimurai, Dated July 05, 2023
Report from News 18 Tamilnadu, Dated July 05, 2023
Report from ETV Bharat, Dated July 05, 2023
Report from Dinamani, Dated July 05, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular