Fact Check
பாகிஸ்தான் வாழ்க என்று இஸ்லாமியர்கள் மும்பையில் கோஷமிட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?
Claim
பாகிஸ்தான் வாழ்க என்று இஸ்லாமியர்கள் மும்பையில் கோஷம்
Fact
வைரலாகும் வீடியோவில் அவர்கள் பாகிஸ்தான் ஒழிக என்றே கோஷமிடுகின்றனர்.
பாகிஸ்தான் வாழ்க என்று இஸ்லாமியர்கள் மும்பையில் கோஷமிட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“கடைசிதுலுக்கன் கூட இல்லாமல் இருந்தால்தான் இந்தியாவில் நிம்மதியாக இந்துக்கள் வாழமுடியும் பாகிஸ்தான் வாழ்கனு கத்தும் இவர்கள் அங்கேயே போய் வாழவேண்டியதுதானே” என்று இந்த வீடியோ பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கடலுக்கடியில் துவாரகை நகரம் அழகு மாறாமல் இருப்பதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
பாகிஸ்தான் வாழ்க என்று இஸ்லாமியர்கள் மும்பையில் கோஷம் எழுப்பியதாக பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ”Members of All India Sunni Jamiatul Ulama protest against Pahalgam Terror Attack in Mumbai” என்று வெளியாகியிருந்த இந்த போராட்டத்தின் வீடியோ செய்தி நமக்குக் கிடைத்தது.
பஹல்கம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மும்பை அகில இந்திய சன்னி ஜமியத்துல் உலமா உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், ”பாகிஸ்தான் முர்தாபாத், ஆதங்க்வாதி முர்தாபாத்” என்று கோஷம் எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, பாகிஸ்தான் ஒழிக, தீவிரவாதிகள் ஒழிக என்றே அவர்கள் கோஷமிட்டனர். செய்தி வீடியோக்களில் அது தெளிவாக இடம்பெற்றுள்ளது.
இதனை திரித்து அவர்கள் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்டதாக தவறாக பரப்பி வருகின்றனர்.
Also Read: மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
பாகிஸ்தான் வாழ்க என்று இஸ்லாமியர்கள் மும்பையில் கோஷம் எழுப்பியதாக பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, IBC24INNews, Dated April 23, 2025
Facebook Post By, Times Now, Dated April 25, 2025