Fact Check
வைகோ பேச்சின் எதிரொலியாக பெரியார் சிலை உடைக்கப்பட்டதா?
Claim
வைகோ பேச்சின் எதிரொலியாக பெரியார் சிலை உடைக்கப்பட்டது.
Fact
பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் 2019 ஆம் ஆண்டில் நடந்ததாகும். இச்சம்பவத்துக்கும் அண்மையில் வைகோ பேசிய பேச்சுக்கும் தொடர்பில்லை.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசுகையில் “பெரியார் சிலையை உடைக்க வந்தால் கையை துண்டாக வெட்டுவேன்” என்று பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து அறந்தாங்கியில் பெரிய சிலை தலை உடைக்கப்பட்டதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை விஜய் சந்தித்ததாக பரவும் பழைய படங்கள்!
Fact Check/Verification
வைகோ பேச்சின் எதிரொலியாக பெரியார் சிலை உடைக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவலில் தந்தி டிவியின் யூடியூப் தம்பனைல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அந்த ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் இத்தகவல் குறித்து தேடினோம்.
அத்தேடலில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2019 ஆண்டு ஏப்ரலில் “பெரியார் சிலை தலை உடைப்பு… அறந்தாங்கியில் பரபரப்பு…” என்று தலைப்பிட்டு வைரலாகும் தம்ப்னைலுடன் தந்தி டிவி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அருகில் இருந்த பெரியார் சிலையின் தலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாகவும், திக மற்றும் திமுக தொண்டர்கள் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று புகாரளித்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் தினத்தந்தி, ஜீ நியூஸ் தமிழ், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிலும் 2019 ஏப்ரலில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் வைகோவின் பேச்சுக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
Also Read: கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி காலில் தவறுதலாக விழுந்த விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Conclusion
வைகோ பேச்சின் எதிரொலியாக பெரியார் சிலை உடைக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தை அண்மையில் வைகோ பேசிய பேச்சுடன் தொடர்புப்படுத்தி இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube video by Thanthi TV, dated April 8, 2019
Report by Indian Express Tamil, dated April 8, 2019
Report by Zee News Tamil, dated April 8, 2019
Report by Daily Thanthi, dated April 8, 2019