ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkலண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

லண்டனில் தலைமறைவாகவிருக்கும் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“சென்னை வந்தடைந்தார் அண்ணாமலை லண்டனில் தலைமறைவாக உள்ள ஆர்.கே சுரேசுடனான சந்திப்பை முடித்து விட்டு சென்னை திரும்பினார்.” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

Screenshot from Twitter @rajlingam78

Archived Link

Screenshot from Facebook/Iyya Venkatesan

Archived Link

Screenshot from Facebook/vengadasalam.senthil

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நுழைய அனுமதிக்கப்படவில்லையா?

Fact Check/Verification

லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி பெயரில் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.

அதில், ”லண்டனில் இருந்து சென்னை வந்தடைந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு” என்று லண்டனிலிருந்து திரும்பிய பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை குறித்து நியூஸ்கார்ட் வெளியாகியிருந்தது.

குறிப்பிட்ட நியூஸ்கார்டினையே தற்போது எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்று அறிய முடிந்தது. எனவே, இதுபற்றி மேலும் விளக்கம் அறிய தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் வினோத்தை தொடர்பு கொண்டு கேட்டோம்.

அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது. அண்ணாமலை லண்டனிலிருந்து சென்னை திரும்பியது குறித்து நாங்கள் வெளியிட்ட செய்தியை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தார்.

Fake News Card
Original News Card

Also Read: கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தாரா ஈபிஎஸ்?

Conclusion

லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Media

Our Sources
Facebook Post From, Thanthi Tv, Dated June 28, 2023

Phone Conversation with Vinoth, Thanthi TV Digital, Dated June 29, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular