புதன்கிழமை, ஜூன் 19, 2024
புதன்கிழமை, ஜூன் 19, 2024

HomeFact Checkசமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலிக்குள்ளானவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று பரவும்...

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலிக்குள்ளானவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று பரவும் போலித்தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலி செய்யப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.

“சமூக வலைத்தளங்களில் அதிகமாக இளைஞர்களால் கேலிக்கையாக விமர்சிக்கும் பட்டியலில் ஸ்டாலின் முதலிடம்” என்பதாக இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Screenshot From Facebook/Dharmaraj
Screenshot From Twitter @Ukartikgarga

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

Also Read: சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி!

Fact Check/Verification

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலி செய்யப்பட்ட பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதாக வைரலாகும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பு ஏதேனும் வெளியாகியுள்ளதா என்று பார்த்தபோது கடந்த ஜூன் 2022ல் ஓராண்டில் திமுக ஆட்சி-கருத்துக்கணிப்பு முடிவுகள் என்கிற செய்தியே புதியதலைமுறையில் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அதிகமாக இளைஞர்களால் கேலிக்குள்ளாகும் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று வைரலாகும் நியூஸ்கார்ட்டில் எழுத்துப்பிழையுடன் தகவல் இடம்பெற்றிருந்தது. கடந்த சில வருடங்களாகவே இந்த நியூஸ்கார்ட் வைரலாகி வருகிறது என்பதும் நமது தேடலில் தெரிய வந்தது.

எனவே, புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானி-யிடம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வைரல் செய்தி குறித்து கேட்டோம்.

”வைரலாகும் செய்தி நாங்கள் வெளியிட்டது அல்ல; முதல்வர் குறித்து நாங்கள் அப்படி எந்த கருத்துக்கணிப்பையும் வெளியிடவில்லை. பரவும் தகவல் போலியானது”

என்று அவர் குறிப்பிட்ட வைரல் செய்தி குறித்த விளக்கத்தை அளித்தார். இதன்மூலம், வைரலாகும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த கருத்துக்கணிப்பு போலியானது என்பது உறுதியாகிறது.

Also Read: பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ!

Conclusion

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலி செய்யப்பட்ட பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதாக வைரலாகும் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Twitter Post From, Puthiyathalaimurai, Dated June 4, 2022
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai, Dated February 15, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular