ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஎன் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்றாரா பாரிவேந்தர்?

என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்றாரா பாரிவேந்தர்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: என் அந்தரங்க படத்தை வெளியிட்டு அதை வைரல் ஆக்கிய திமுகவுடன் இனி ஒரு காலத்திலும் கூட்டணி கிடையாது – பாரிவேந்தர்

Fact: வைரலாகும் நியூஸ்கார்டினை புதியதலைமுறை வெளியிடவில்லை. அது போலியாக பரவுகிறது.

என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று பாரிவேந்தர் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.

”அறியாத வயதில் நான் செய்த தவறு அதை திமுக தான் பெரிதாக்கியது; என் அந்தரங்க படத்தை வெளியிட்டு அதை வைரல் ஆக்கிய திமுகவுடன் இனி ஒரு காலத்திலும் கூட்டணி கிடையாது – பாரிவேந்தர்” என்று அந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

என் அந்தரங்க படத்தை
Screenshot from x @KABALI_DMK

x Link/Archived Link

Screenshot from x @thechanakkiyan

X Link/Archived Link

Screenshot from Facebook/M.K.Samy.39108

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததா பாஜக?

Fact Check/Verification

என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று பாரிவேந்தர் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

முன்னதாக, இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது; ஏனெனில் திமுக கூட்டணி தொடர்ந்தால் தன்னால் எந்த நன்மையும் தொகுதிக்கு செய்ய இயலாது என்று பாரிவேந்தர் கூறியதாக நியூஸ்கார்ட் வெளியிட்டிருந்தது கதிர் நியூஸ்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் வெளியாகிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், கடந்த நவம்பர் 09, 2022 அன்று “ 10% இடஒதுக்கீடு – இந்திய ஜனநாயக கட்சி வரவேற்பு” என்று நியூஸ்கார்ட் ஒன்று பகிரப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நியூஸ்கார்டு பாணியிலேயே வைரல் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவின் பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; அதனை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.

Also Read: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?

Conclusion

என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று பாரிவேந்தர் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with, Ivani, Puthiyathalaimurai Digital, Dated March 21, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular