Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்பதாக வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்தவர்களுள் ஒருவரான பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது விடுதலைக்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்நிலையில், “காணக்கிடைக்காத காணொளி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடைசி நிமிட காணொளி” என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மகனின் பிறந்தநாள் எனப்பரவும் தவறான தகவல்!
Fact Check/Verification
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ காட்சி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட வீடியோ காட்சி கடந்த 2018 ஆம் ஆண்டு முதலாகவே பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருவது நமக்குத் தெரிய வந்தது.
எனினும், குறிப்பிட்ட வீடியோ காட்சி சித்தரிக்கப்பட்டது போன்று தோன்றியதால் அதனை கீ-ஃப்ரேம்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் தேடினோம். நமது தேடலின் முடிவில் குறிப்பிட்ட வீடியோ காட்சி 2007 ஆம் ஆண்டு, நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாள மொழியில் வெளியான “மிஷன் 90 டேஸ்” (Mission 90 Days) என்கிற திரைப்படக் காட்சி என்பதை நாம் கண்டறிந்தோம்.
Malayalam Movie Channel என்கிற யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள இத்திரைப்படத்தில் அக்குறிப்பிட்ட ராஜீவ் காந்தி கொலை குறித்த காட்சியை மட்டும் எடிட் செய்து உண்மையான வீடியோ என்பதாக பரப்பி வருகின்றனர்.
குறிப்பிட்ட திரைப்படத்தில் காட்டப்படும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின் திரைப்படத்திற்காக சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சியை கத்தரித்தே ராஜீவ் காந்தி கொலையின் காணக்கிடைக்காத வீடியோ என்பதாக வைரலாக்கி வருகின்றனர் என்பது உறுதியானது.
Conclusion
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ காட்சி, திரைப்படம் ஒன்றின் சித்தரிக்கப்பட்ட காட்சி என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated/False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.