திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Check2022 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமைகளில் வரும் மாதத்தின் குறிப்பிட்ட நாட்கள் என்று பரவும் வதந்தி!

2022 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமைகளில் வரும் மாதத்தின் குறிப்பிட்ட நாட்கள் என்று பரவும் வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

2022 ஆம் ஆண்டான தற்போது நடைபெற்று வருகின்ற ஆண்டில் மாதம் மற்றும் தேதி ஒன்றாக வரும் நாட்கள் அனைத்துமே வெள்ளிக்கிழமையில் வருவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

2022
Source: Facebook

உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வருகின்ற கொரோனா வைரஸின் புதிய வரவு ஓமைக்ரான், நெருங்கி வருகின்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் களை கட்டும் உள்ளாட்சித் தேர்தல் களம் என்று பல்வேறு சூடான செய்திகளைத் தாங்கிப் பிறந்திருக்கிறது 2022 ஆம் வருடம்.

வருடம் பிறந்து ஒரு மாத காலகட்டம் ஓடிவிட்டதே தெரியாத அளவிற்கு நாளொரு புதிய பிரச்சினையும் பொழுதொரு அரசியல் சதுரங்கமும் என்பதாகச் செல்கிறது நாட்டு நிலவரம்.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு முழுவதுமே மாதமும் தேதியும் ஒரே எண்ணாக வருகின்ற நாட்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமையிலேயே வருகிறது என்பதாகத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“இந்த வருட சிறப்பை பாருங்கள் 2022” என்கிற தலைப்புடன் கூடிய நாட்களின் தொகுப்பு வைரலாக்கப்பட்டு வருகிறது.

Source: Facebook

Facebook Link

2022
Source: Facebook

Facebook Link

Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்றாரா எடப்பாடி பழனிசாமி?

Fact check/Verification

2022 ஆம் ஆண்டு, அனைத்து மாதங்களின் மாதத்தை ஒட்டிய தேதி கொண்ட நாட்கள் வெள்ளிக்கிழமைகளிலேயே வருகிறது என்பதாகப் பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலில், குறிப்பிட்ட வைரல் பதிவில் கூறியிருப்பது போன்று மாதம் மற்றும் தேதி ஒன்றாக வரும் நாட்கள் வெள்ளிக்கிழமைகளில் வருகிறதா என்பது குறித்து 2022ம் ஆண்டுக்கான நாட்காட்டியில் ஆராய்ந்தோம். 2022 ஆம் ஆண்டு பிறந்த 01/01/2022 என்கிற தேதியே சனிக்கிழமையன்றுதான்.

source: Malaimalar

மேலும், பிப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமையான நாளை பிறக்கவிருக்கின்ற நிலையில், 02/02/2022 என்கிற தேதி புதன்கிழமையன்று வருகிறது.

தொடர்ந்து, நாட்காட்டியை ஆராய்ந்ததில் செப்டம்பர் மாதம், அதாவது 09/09/2022 மற்றும் 11/11/2022 ஆகிய இருதினங்கள் மட்டுமே வெள்ளிக்கிழமையன்று வருகிறது.

Source: Google Calendar

எனவே, 2022 ஆம் ஆண்டு முழுவதுமே மாதம் மற்றும் தேதி ஒரே எண்ணான நாட்கள் வெள்ளிக்கிழமையில் மட்டுமே வருவதாகப் பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Conclusion

2022 ஆம் ஆண்டு, அனைத்து மாதங்களின் மாதத்தை ஒட்டிய தேதி கொண்ட நாட்கள் வெள்ளிக்கிழமைகளிலேயே வருகிறது என்பதாகப் பரவுகின்ற தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Google Calendar

Malaimalar

CalendarDate.com

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular