இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இன்னைக்கு ட்ரில் என்றுதானே தகவல்.. ஆனால் த்ரில் என்று சொல்லவே இல்லை… வெற்றி நமதே…..” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் காட்சி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோ Al jazeera வெளியிட்டதாக அதில் லோகோ மற்றும் அரபு வார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில் குறிப்பிட்ட வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தோம்.
அப்போது, ”Injuries reported in Gaza’s Indonesian hospital” என்கிற தலைப்பில் கடந்த நவம்பர் 09, 2023 அன்று வெளியாகியிருந்த செய்தி வீடியோவில் வைரலாகும் காட்சி இடம்பெற்றிருந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு காசாவில் அமைந்துள்ள இந்தோனேசியன் மருத்துவமனைக்கு அருகே வான்வழி தாக்குதல் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பது நமக்குத் தெரிய வந்தது.

குறிப்பிட்ட வீடியோவையே தற்போது இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் காட்சி என்று பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இந்து குடும்பத்தை இஸ்லாமியர்கள் தாக்கினரா?
Conclusion
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் காட்சி என்று பரவும் வீடியோ காசாவில் நடைபெற்ற தாக்குதலுடன் தொடர்புடையது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Al Jazeera English, Dated November 09, 2023
Report From, The Sun, Dated November 10, 2023