வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

HomeFact Check‘GO Back Modi’ பதாகையை ஏந்தி பிரதமர் வரவை எதிர்த்தாரா வானதி சீனிவாசன்?

‘GO Back Modi’ பதாகையை ஏந்தி பிரதமர் வரவை எதிர்த்தாரா வானதி சீனிவாசன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

‘GO Back Modi’ பதாகையை ஏந்தி பிரதமர் வரவை வானதி சீனிவாசன் எதிர்த்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

GO Back Modi பதாகையை ஏந்தி பிரதமர் வரவை வானதி சீனிவாசன் எதிர்த்ததாக பரவும் புகைப்படம்

பிரதமர் நரேந்திர மோடி 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வருகிறார். ஒவ்வொரு முறை பிரதமர் தமிழகம் வரும்போதும் GO Back Modi எனும் ஹேஷ்டேக்  சமூக ஊடகங்களில் வைரலாகுவது வழக்கம்.  

இதைத் தொடர்ந்து  இம்முறையும் ‘GO Back Modi’ எனும் ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘வெல்கம் மோடி’ எனும் ஹேஷ்டேகும்  வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் GO Back Modi எனும் பதாகையை ஏந்தி மோடி வரவை எதிர்த்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

GO Back Modi பதாகையை ஏந்தி பிரதமர் வரவை வானதி சீனிவாசன் எதிர்த்ததாக பரவும் புகைப்படம் - 1

Twitter Link | Archive Link

GO Back Modi பதாகையை ஏந்தி பிரதமர் வரவை வானதி சீனிவாசன் எதிர்த்ததாக பரவும் புகைப்படம் - 1 2

Facebook Link

GO Back Modi பதாகையை ஏந்தி பிரதமர் வரவை வானதி சீனிவாசன் எதிர்த்ததாக பரவும் புகைப்படம் - 3

Facebook Link

Also Read: குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அவமதித்தாரா ஜோ பைடன்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

பிரதமர் வரவை எதிர்த்து ‘GO Back Modi’ பதாகையை வானதி சீனிவாசன் ஏந்தியதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில், இந்திய அளவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக, கோவையில் காணப்படும் ஈஷா ஆதி யோகி சிலை முன்பாக நின்று, பிரதமர் மோடிக்கு பாஜகவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.  

Archive Link

இத்தருணத்தின்போது வானதி சீனிவாசன் எடுத்துக்கொண்ட புகைப்படமே எடிட் செய்யப்பட்டு ‘GO Back Modi’ பதாகையை வானதி சீனிவாசன் ஏந்தியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Comparison image


Also Read:
 கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்றாரா அண்ணாமலை?

Conclusion

‘GO Back Modi’ பதாகையை ஏந்தி பிரதமர் வரவை வானதி சீனிவாசன் எதிர்த்ததாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Altered Image/Manipulated Media

Source

Vanathi Srinivasan’s tweet, tweeted on October 24, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular