Fact Check
பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim
பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.
Fact
வைரலாகும் வீடியோ குஜராத்தைச் சேர்ந்ததாகும்.
பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”தேர்தலுக்குப் பிறகு பீகாரில் நடக்கும் மகா யுத்தம் எந்தச் செய்தி நிறுவனமும் வெளியிடக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கானுங்களா….. ?” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அமித் ஷாவின் காலணிகளை ஊடகவியலாளர் நவிகா குமார் துடைத்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்ததாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த அக்டோபர் 12, 2025 அன்று குஜராத்தில் அமைந்துள்ள போடாட் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கிசான் பஞ்சாயத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கலவரத்தின் காட்சிகள் இவை என்பது நமக்கு உறுதியாகியது.
குறிப்பிட்ட காட்சியே தற்போது பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அங்கு கலவரம் வெடித்தது என்பதாகப் பரவி வருகிறது என்பது நமக்கு உறுதியாகியது.

Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post by, vadodara_sanskari_nagari, Dated October 13, 2025
News Report from, TOI, Dated October 12, 2025