வெள்ளிக்கிழமை, அக்டோபர் 11, 2024
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 11, 2024

HomeFact Checkமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவை தமிழக முதல்வர் பார்வையிட்டாரா?

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவை தமிழக முதல்வர் பார்வையிட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகும் உணவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பார்வையிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகும் உணவை எடப்பாடி பழனிசாமி அவர்கள் பார்வையிட்டதாக பரவும் புகைப்படம்
Source: Twitter

Fact Check/Verification

கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது.

 இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கனத்த மழை பொழிந்து வருகிறது. இவ்விரு மாநிலங்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

கடந்த கால நிகழ்வுகளை மனதில் கொண்டு, புயல் கால எச்சரிக்கை நடவடிக்கைகள் இவ்விரு மாநிலங்களிலும் மிகவும் எச்சரிக்கையுடன் முன் கூட்டியே செய்யப்பட்டது.

இதுக்குறித்த பல செய்திகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் அதிகமாக வெளிவந்தது. அதில் ஒன்றாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகும் உணவை பார்வையிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகும் உணவை பார்வையிட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அந்தப் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.

 அவ்வாறு ஆய்வு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் புகைப்படமானது பழைய புகைப்படம் எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் கொரானாக் காரணமாக அனைத்து உணவகங்களும் மூடி இருந்த நிலையில், அம்மா உணவகம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அப்போது தமிழக முதல்வர் அவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

Source: CMO Tamilnadu

இத்தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்தே  தற்போது  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தயாராகும் உணவை முதல்வர் பார்வையிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியைப் பகிர்ந்து வருகின்றனர்.

 Conclusion

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகும் உணவை முதல்வர் பார்வையிட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம் பழைய புகைப்படம் என்பதையும், அப்புகைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் அம்மா உணவகங்களை முதல்வர் பார்வையிட்டபோது எடுக்கப்பட்டது என்பதையும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Twitter Profile: https://twitter.com/sasiitcbe/status/1331495550542172161

Twitter Profile: https://twitter.com/AIADMKSanthanam/status/1331502149025447936

CMO Tamilnadu: https://twitter.com/CMOTamilNadu/status/1245232138854838272

Twitter Profile: https://twitter.com/sankarg48665283/status/1331635874040221696

Twitter Profile: https://twitter.com/Ranjithvel26/status/1331558475516706818


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular