Fact Check
ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?

Claim
ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான செய்தியாகும்.
ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இன்னுமா இந்த ஊரு இந்த டிராமாவை எல்லாம் நம்புது !
ED கைதில் இருந்து தப்பிக்க திமுக குடும்பம் நாடகத்தை ஆரம்பித்து விட்டது ! சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீல்ந்தாயடா 10 ரூபாய் பாலாஜி.. இன்று உனது நிலைமைய பாருங்கோ !” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு நன்கொடை வழங்க வங்கிக் கணக்கை தொடங்கியதா மத்திய அரசு?
Fact Check/Verification
ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
தமிழ்நாடு அரசு அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதாக இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.
ஆனால், பரவி வரும் நியூஸ்கார்டில் 2024 என்று கடந்த வருடம் இடம்பெற்றிருந்ததால் அதை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதில், கடந்த ஜூலை 21, 2024 அன்று பாலிமர் செய்திகள் பக்கத்தில் இந்த நியூஸ்கார்ட் பதிவிடப்பட்டிருந்தது.

மேலும், இதுகுறித்த செய்திகளை ஆராய்ந்தபோது கடந்த ஜூலை 21, 2024 அன்று தந்தி டிவியில் “#BREAKING || மூச்சு விடுவதில் சிரமம்.. செந்தில் பாலாஜி ஐ.சி.யூ-வில் அனுமதி” என்று செய்தி வெளியாகியிருந்தது.
எனவே, கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான நியூஸ்கார்டே தற்போதைய ஒன்று என்பதாக வைரலாகிறது என்பது உறுதியாகியது.
இதுதொடர்பாக, Polimer News செய்தியாளர் சுரேந்தரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் பழையது. தற்போது வெளியாகியதல்ல” என்று விளக்கமளித்தார்.
Also Read: பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 15 பேர் இஸ்லாமியர்கள் என்று பரவும் அட்டவணை உண்மையா?
Conclusion
ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பரவும் நியூஸ்கார்ட் கடந்த ஆண்டு வெளியாகிய செய்தி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post From, Polimer News, Dated July 21, 2024
Phone conversation with, Surendar, Polimer News, Dated April 30, 2025