வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024
வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024

HomeFact Checkவைரலானப் பதிவில் இருந்தவர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸா?

வைரலானப் பதிவில் இருந்தவர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்கிற பெண்ணின் பதிவு ஒன்று தற்சமயம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இப்பதிவின் கூடவே மொட்டைத் தலையுடன் ஒரு பெண்ணின் புகைப்படமும் இணைக்கப்பட்டு, அவர்தான் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்று கூறப்பட்டு வருகிறது.

கிர்சாய்தா என்று வைராலனப் பெண்
வைரலானப் புகைப்படம்

Fact Check/Verification

தற்சமயம் சமூக வலைத்தளங்களில், “உலகப் புகழ்பெற்ற டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ்  அவர்கள் கடைசியாக எழுதிய வார்த்தைகள்” என்று கூறி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.  கூடவே ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் இணைத்து அவர்தான் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ்  என்று பதிவிடப்பட்டு வருகிறது.

இப்பதிவைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

https://www.facebook.com/relaxplzztamil/photos/a.1145404835571494/3067828239995801/
https://twitter.com/olimathi0003/status/1309854776075661315

சமூக வலைத் தளங்களில் பகிரப்படும் இந்தப் பதிவின் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, இதை நியூஸ் செக்கர் சார்பில் ஆராய முனைந்தோம்.

உண்மை என்ன?

கிர்சாய்தா ரோட்ரிக்ஸ்  என்பவர் யார்? அவர் நிஜமாகவே இவ்வாறு ஒரு பதிவை வெளியிட்டுள்ளாரா என்பதை அறிய இவர் குறித்து முதலில் ஆராய்ந்தோம்.

கிர்சாய்தாவும் அவரது கடைசி வார்த்தைகளும்

கிர்சாய்தாக் குறித்து அறிய, அவர் குறித்துத் தேடினோம்.

கிர்சாய்தா ஒரு புகழ்ப்பெற்ற ஃபேஷன் டிசைனராவார். இவரை ஏறக்குறைய 4.9 இலட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். இவருக்கு வயிற்றுப் புற்றுநோய் இருந்ததால் கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

இவர் தன் சிகிச்சைக் குறித்துத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்துள்ளார். இவ்வரிசையில் கடைசியாக பதிவு செய்தப் பதிவே தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இப்பதிவுக் குறித்து 2018-இல் Amazing Alero எனும் இணையத்தளத்தில் கட்டுரை வெளிவந்துள்ளது.

கிர்சாய்தாக் குறித்துத் தேடுகையில் நமக்கு அவரது புகைப்படம் கிடைத்தது.

அப்புகைப்படம் உங்கள் பார்வைக்காக:

உண்மையான கிர்சாய்தா
கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் அவர்களின் படம்.

இப்புகைப்படம் வைரலாகும் பதிவில் இருந்த புகைப்படம் அல்ல. அது மற்றொரு பெண்ணின் புகைப்படமாகும்.

வாசகர்களின் புரிதலுக்காக வைரலாகும் புகைப்படத்தையும் கிர்சாய்தாவின் அவர்களின் புகைப்படத்தையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

யார் அந்தப் பெண்?

வைரலாகும் படத்தில் இருந்த மற்றொரு பெண் யார் என்று அறிந்துக் கொள்ள, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.

அவ்வாறு ஆராய்ந்ததில் அப்பெண் குறித்து நம்மால் அறிய முடிந்தது. வைரலாகும் படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் நிக்கோலே ஷ்க்வீப்.

 இவர் ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் சம்திங் பிரெட்டி எனும் பிளாகை நடத்தி வருகிறார்.

இவருக்கு மார்பக புற்றுநோய் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை  எடுத்துக்கொண்டு இருந்தப்போது Ambry Genetics எனும் இணையத்தளத்தில், அவரின் புகைப்படத்தை பதிவிட்டு தனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார்.

கிர்சாய்தா என்று கூறப்படுபவர் எழுதியக் கட்டுரை
Ambry Genetics வந்தக் கட்டுரை

இக்கட்டுரையில் பதிவிட்டப் புகைப்படத்தையே தற்போது கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்று வைரலாக்கி வருகின்றனர்.

Conclusion

நம் விரிவான ஆய்வின் மூலம் அறிந்தவை:

கிர்சாய்தாக் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்  விஷயங்கள் அனைத்தும் உண்மையே.

ஆனால் அப்பதிவில் காணப்படும் புகைப்படத்தில் இருப்பவர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் கிடையாது.  அவர் பெயர் நிக்கோலே ஷ்க்வீப் ஆகும்.

Result: Misleading


Our Sources

Facebook Profile: https://www.facebook.com/relaxplzztamil/photos/a.1145404835571494/3067828239995801/

Facebook Profile: https://www.facebook.com/photo?fbid=3145087135616757&set=a.108048719320629

Amazing Alero: https://www.amazingalero.com/last-words-of-fashion-blogger-kyrzayda-rodriguez-who-died-after-battle-with-stomach-cancer/https://www.amazingalero.com/last-words-of-fashion-blogger-kyrzayda-rodriguez-who-died-after-battle-with-stomach-cancer/

Ambry Genetics: https://blog.ambrygen.com/patient/post/224/my-breast-cancer-journey-part-2-how-i-prepared-for-chemotherapy


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular