ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkலடாக் பகுதியில் இந்திய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வதந்தி

லடாக் பகுதியில் இந்திய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வதந்தி

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

லடாக் பகுதியில் M-17 ரக இந்திய ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக சமூக வலைத்தளங்களில் செய்திப் பரவி வருகிறது.

வைரலானச் செய்தி

 Fact Check/Verification

இந்திய – சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் லடாக்கில் இந்திய M-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக  தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

https://twitter.com/MHasnainMughal/status/1305344197994721280
https://twitter.com/eadksk__0/status/1305181622120198144
https://twitter.com/Irmaknepal/status/1305184174572056578

சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இச்செய்தியின்  உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம்.

உண்மை என்ன?

சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.

இவ்வாறு ஆராய்ந்ததன் மூலம் சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்ற உண்மை நமக்குத் தெரிய வந்தது.

உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் விபத்தானது லடாக்கில் நடைப்பெறவில்லை.  இவ்விபத்தானது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில் அருகே நடைப்பெற்றதாகும்.

ராணுவத்துக்குத் தேவையான சிலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்த ஹெலிகாப்டர் சென்றுள்ளது. தரையிறங்கும்போது  ஹெலிகாப்டர் இரும்புக் கட்டியில் உராய்ந்ததால் நெருப்புப் பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்செய்தியானது அப்போதே டைப்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்துள்ளது.

லடாக் விபத்து என்று கூறப்படும் சம்பவம் தொடர்பானச் செய்தி
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்தச் செய்தி.

மேலும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நிறுவனமான PIB(Press Information of burea)-யின் ஃபேக்ட் செக் டிவிட்டர் பக்கத்தில், வைரலாகி வரும் இச்செய்தியை மறுத்ததுடன், இந்நிகழ்வு 2018-ல் கேதார்நாத்தில் நடந்த விபத்துதான் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் லடாக் பகுதியில் M-17 ரக இந்திய ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று உறுதியாகியுள்ளது.

Result: False

Our Sources

Twitter Profile: https://twitter.com/eadksk__0/status/1305181622120198144

Twitter Profile: https://twitter.com/mubasherlucman/status/1305149882831900672

Times Of India: https://timesofindia.indiatimes.com/city/dehradun/iaf-helicopter-collides-catches-fire-pilot-among-four-injured/articleshow/63590906.cms

Twitter Profile: https://twitter.com/MHasnainMughal/status/1305344197994721280

Twitter Profile: https://twitter.com/Irmaknepal/status/1305184174572056578

PIB Fact Check: https://twitter.com/PIBFactCheck/status/1305793162271625216

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular