திங்கட்கிழமை, ஜூலை 22, 2024
திங்கட்கிழமை, ஜூலை 22, 2024

HomeFact Checkமதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் எடிட் செய்யப்பட்ட...

மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவிப்பு

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்

சென்னையில் மதுப் பிரியர்களுக்கு ‘ஈவினிங் ஸ்நாக்ஸ்’ எனப்படும் சிறுதீனி வழங்கப்படும்” என்று மேயர் பிரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@Ratnarajah20

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: ஜம்மு-காஷ்மீரில் அமைந்த உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் என்று பரவிய சீனா வீடியோ!

Factcheck / Verification

மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது. சென்னையில் மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் பங்கேற்கும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 – 2024 கல்வியாண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை புதிய தலைமுறை நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.

அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

தொடர்ந்து புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பொறுப்பாளர் இவானியை விசாரிக்கையில், அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

Also Read: ராகுல் காந்தி எம்பி, எம்எல்ஏ தகுதி இழப்புத் தீர்ப்புக்கு எதிரான மசோதாவை 2013ல் கிழித்தெறிந்தாரா? உண்மை என்ன?

Conclusion

மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources

Report from Puthiya Thalaimurai, dated March 27, 2023
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai, dated March 28, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular