நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரக இருக்கும் காளியம்மாள் பிரகாசன், அக்கட்சியிலிருந்து விலகவிருப்பதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்தியல் ரீதியாக பேசமாட்டார்; தனிநபர் தாக்குதல் மட்டுமே செய்வார் என்று காளியம்மாள் பேசியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சீமான் கருத்தியல் ரீதியாக பேச மாட்டார்; தனிநபர் தாக்குதல் மட்டுமே செய்வார் என்று காளியம்மாள் கூறியதாக பரப்பப்படும் வீடியோவில் பிஹைண்ட்வுட் ஊடகத்தின் வாட்டர்மார்க் இருப்பதை காண முடிந்தது. அதேபோல் காளியம்மாள் அணிந்திருக்கும் மைக்கிலும் பிஹைண்ட்வுட் ஊடகத்தின் பெயர் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் அக்டோபர் 06, 2023 அன்று பிஹைண்ட்வுட்ஸ் ஓ2 யூடியூப் பக்கத்தில் வெளிவந்திருந்த பேட்டியில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் கருத்தை காளியம்மாள் பேசியிருப்பதை காண முடிந்தது.
ஆனால் காளியம்மாள் பேசிய இக்கருத்தானது சீமான் குறித்து பேசப்பட்டிருக்கவில்லை; பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா குறித்து பேசப்பட்டிருந்தது.
இப்பேட்டியில் ஹெச்.ராஜா குறித்து (9:57 நேரத்தில்) கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு காளியம்மாள் அளித்த பதிலின் ஒரு பகுதியே சமூக ஊடகங்களில் பரப்பட்டு வருகின்றது.
Also Read: ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்பதற்கு பதிலாக ‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று போஸ்டர் ஒட்டினரா பாஜகவினர்?
Conclusion
சீமான் கருத்தியல் ரீதியாக பேச மாட்டார்; தனிநபர் தாக்குதல் மட்டுமே செய்வார் என்று காளியம்மாள் கூறியதாக பரப்பப்படும் வீடியோத்ததகவல் தவறானதாகும். பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா குறித்து காளியம்மாள் கூறிய கருத்தை சீமான் குறித்து கூறியதாக திரித்து சமூக ஊடகங்களில் பரப்பபட்டு வருகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by Behindwoods O2, Dated October 06, 2023