சனிக்கிழமை, ஜூன் 22, 2024
சனிக்கிழமை, ஜூன் 22, 2024

HomeFact Checkகமலா ஹாரிஸ் இந்திய உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாரா?

கமலா ஹாரிஸ் இந்திய உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், டெல்லியில் நடைபெற்று வருகின்ற இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்விட் போட்டதாகப் புகைப்படத் தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

Source: Facebook

Fact Check/Verification:

இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கக் கூடியவை என்கிற வகையில் இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து அச்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களது போராட்டத்தை முன்வைத்து இணையத்தில் பல்வேறு போலிச்செய்திகளும் வலம் வருகின்றன. அதில் ஒன்றுதான் கமலா ஹாரிஸ், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் என்று பரவும் ட்விட் புகைப்படம்.

அந்த ட்விட் குறித்த ஸ்க்ரீன் ஷாட் போன்ற புகைப்படத்தையும், தகவலையும் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Source: Twitter
Source: Twitter

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இந்திய அரசு விவசாயிகளை ஒடுக்குவதாக அவர் கூறியிருப்பதாக வலம் வரும் அப்புகைப்படத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மையும் பின்னணியும்:

கமலா ஹாரிஸ், இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட் என்று பரவும் அப்புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய முதலில் அவரது அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.

ஆனால், அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அப்படிப்பட்ட ட்விட் எதுவும் நமக்குக் காணக்கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, வைரலாகும் ட்விட் புகைப்படத்தில் இருக்கும் வார்த்தைகளை உபயோகித்து தேடிப்பார்த்தபோது, அந்த ட்விட் உண்மையில் கனடாவைச் சேர்ந்த ஜாக் ஹாரிஸ் என்னும் வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதியால் இடப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

Source: Twitter
Original-Duplicate

மேலும், வைரலாகும் இத்தகவல் குறித்த உண்மையறியும் சோதனைச் செய்தியை வெளியிட்டுள்ள பிபிசி தமிழ் லிங்க் நமக்கு மேலும் ஒரு ஆதாரமாகக் கிடைத்தது.

Conclusion:

எனவே, கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்விட் போட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் மற்றும் தகவல் போலியானது என்பதை நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே, வாசகர்கள் அத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Result: Fabricated

Our Source:

Twitter: https://twitter.com/JackHarrisNDP/status/1332402743181504514?s=20

BBC Tamil: https://www.bbc.com/tamil/india-55205835

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular