வெள்ளிக்கிழமை, மே 17, 2024
வெள்ளிக்கிழமை, மே 17, 2024

HomeFact Checkஉத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சியினர் பேசவிடாமல் தடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சியினர் பேசவிடாமல் தடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: உத்தவ் தாக்கரேயை காங்கிரஸார் பேச விடாமல் தடுக்கிறார்கள்

Fact: வைரல் வீடியோவில் அவரை கூடுதல் நிமிடங்கள் பேசக்கோரியது தவறாக பரவுகிறது.

உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சியினர் பேசவிடாமல் தடுத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“உத்தவ் தாக்கரேயை காங்கிரஸார் பேச விடாமல் தடுக்கிறார்கள்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from x @JaiRam92739628

X Link

Screenshot from Facebook/vetrivel.ramakirshnan

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?

Fact Check/Verification

உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சியினர் பேசவிடாமல் தடுத்ததாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், இந்த வீடியோவின் முழு காட்சியும் ABP Majha வெளியிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது.

அதில், மகாராஷ்டிரா வர்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் உத்தவ் தாக்கரேயிடம் காங்கிரஸார் பேசியபிறகு அவர் மீண்டும் தடையின்றி மேடையில் பேசுவதை நம்மால் கண்டறிய முடிந்தது. இதுகுறித்த செய்திகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, இந்த நிகழ்வின் முழுமையான லைவ் வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், பேசிக்கொண்டிருந்த அமர் காலேவிடம் ஒருவர் சென்று பேசியவுடன் அவர் உரையை முடித்துக்கொண்டதும் உத்தவ் தாக்கரே பேச வருகிறார்.

அவர் மைக்கிடம் வந்ததும் அவரிடம் பேசும் காங்கிரஸார் அவர், “5 நிமிடம்” என்று கூறியதைத் தொடர்ந்து “இல்லை 15 நிமிடமாவது பேசுங்கள்” என்று மற்ற தலைவர்கள் அவரிடம் கூறுவதும் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, 10 நிமிடங்களுக்கு உத்தவ் தாக்கரே உரையாற்றுகிறார்.

இதன்மூலம், உத்தவ் தாக்கரேவை அதிக நேரம் பேசவேண்டும் என்று காங்கிரஸார் கேட்டுக்கொண்ட நிகழ்வு தவறாக பரப்பப்பட்டுவருகிறது.

 Also Read: வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?

Conclusion

உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சியினர் பேசவிடாமல் தடுத்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video From, ABP Majha, Dated April 22, 2024
Youtube Video From, Mumbai Tak, Dated April 22, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular