மழை வெள்ளம் காரணமாக மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லும் இந்நிகழ்வானது புதுவை வாதனூரில் நடைப்பெற்றது, விழுப்புரம் வானூரில் நடைபெற்றது, பேராணம்பட்டில் நடைப்பெற்றது, அசாமில் நடைப்பெற்றது, கேரளாவில் நடைப்பெற்றது என பலரும் பல இடங்களை குறிப்பிட்டு இவ்வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.



Also Read: 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரா எடப்பாடி பழனிச்சாமி?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
பலரும் பல இடங்களை குறிப்பிட்டு மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லும் நிகழ்வு குறித்து பரப்பி வருவதால் உண்மையில் இந்நிகழ்வு எங்கு நடைப்பெற்றது என்பது குறித்து தெளிவாக ஆய்வு செய்து விளக்க விரும்பினோம். எனவே வைரலாகும் வீடியோவை கீ பிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
இவ்வாறு செய்ததில் இந்நிகழ்வானது இந்தியாவிலேயே நடக்கவில்லை, இது கடந்த ஆண்டு மெக்ஸிகோவில் நடைப்பெற்றது என்பதை அறிய முடிந்தது.
கடந்த ஆண்டு மெக்ஸிகோவின் நயரித் பகுதியில் ஹென்னா எனும் புயல் வீசியது. இந்த புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் மாடுகள் கூட்டமாக அடித்து செல்லப்பட்டது. இந்த நிகழ்வே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றதாக வைரலாகி வருகின்றது. இதுக்குறித்து லா ஜோர்னடா (LaJornada) எனும் மெக்ஸிக்கன் இணையத்தளத்தில் செய்தி வந்திருந்ததை நம்மால் காண முடிந்தது.

இதைத் தவிர்த்து மேலும் சில ஊடகங்களிலும் இந்நிகழ்வு குறித்து செய்தி வந்திருந்தது. அதை இங்கே, இங்கே படிக்கலாம்.
Also Read: நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்றாரா வன்னி அரசு?
Conclusion
பலரும் பல இடங்களை குறிப்பிட்டு பரப்பப்படும் மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லும் நிகழ்வானது உண்மையில் இந்தியாவில் நடந்ததல்ல, அது மெக்ஸிகோவில் நடந்தது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.